கருணாநிதியை அர்னால்டு சந்திக்க விடாமல் தடுத்த அந்த "ஆறுமுகம்" யாரப்பா....??

By Sudha

சென்னை: சென்னைக்கு வந்திருந்த அர்னால்ட் ஸ்வார்ஷெநெக்கரையும், திமுக தலைவர் கருணாநிதியையும் சந்திக்க வைக்க ஒரு முயற்சி நடந்ததாம். ஆனால் முக்கியமான இயக்குநர்தான் அதைத் தடுத்து விட்டாராம்.

கருணாநிதியை அர்னால்ட் சந்தித்தால், தனது படத்திற்குப் பெரும் பஞ்சாயத்து வந்து விடும் என்று பயந்தே இந்த சந்திப்பை முளையிலேயே கிள்ளி எறிந்து விட்டாராம் அந்த இயக்குநர்.

இதனால் திமுக வட்டாரத்தில் அந்த இயக்குநர் மீது கடும் கோபமாக இருக்கிறார்களாம். இத்தனைக்கும் அர்னால்டே கருணாநிதியை சந்திக்க ஆர்வமாக இருந்தாராம். ஆனால் இந்த இயக்குநர்தான் இடையில் புகுந்து "சங்கரா சங்கரா" பாடி விட்டதாக சொல்கிறார்கள்.

"பாடிகாட் முனீஸ்வரரை"க் கூப்பிட்டு விழா!

சமீபத்தில் ஐ படத்தின் ஆடியோ விழாவை ஜெமினி சர்க்கஸ் ரேஞ்சுக்கு நடத்திக் காட்டியது அந்தப் படத்தின் குழு.

என்னா விழா.. என்னா விழா...!

என்னா விழா.. என்னா விழா...!

விழாவுக்கு வந்திருந்த அர்னால்டே விலா எலும்பு துடிதுடிக்க கடுப்பாடு பாதியிலேயே கிளம்பிப் போகும் அளவுக்கு "வெழா"வை சிறப்பாக நடத்தியிருந்தனர் ஐ குழுவினர்.

ஆட்டோகிராப் வாங்க கும்மியடித்த கூட்டம்

ஆட்டோகிராப் வாங்க கும்மியடித்த கூட்டம்

அர்னால்டைப் பார்த்து ஆட்டோகிராப் வாங்கவும், போட்டோ எடுக்கவும் திரையுலகினர் பலரும் முண்டியடித்தனர். இருப்பினும் சூர்யாவுக்கே அந்த வாய்ப்பு ஏகபோகமாக அமைந்து போனது.

ஜெயலலிதாவை சந்தித்த அர்னால்ட்

ஜெயலலிதாவை சந்தித்த அர்னால்ட்

முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் அர்னால்ட்.

கருணாநியையும் சந்திக்க ஆர்வம்

கருணாநியையும் சந்திக்க ஆர்வம்

அதேபோல திமுக தலைவர் கருணாநிதியையும் சந்திக்க ஆர்வமாக இருந்தாராம் அர்னால்ட். இதற்கு முக்கியக் காரணம் மா.சு என்று செல்லமாக அழைக்கப்படும் முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம்தான்.

ஆல்ரெடி அறிமுகமாம்

ஆல்ரெடி அறிமுகமாம்

மா.சுப்பிரமணியத்திற்கு ஏற்கனவே அர்னால்டைத் தெரியும். அமரிக்கா போயிருந்தபோது அர்னால்டை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். அந்த அடிப்படையில் சென்னை வந்த அர்னால்டைத் தொடர்பு கொண்ட மா.சுப்பிரமணியம் திமுக தலைவர் கருணாநியின் திரையுலக சாதனைகளை அவரிடம் எடுத்துக் கூறி சந்தித்தால் நல்லது என்று கூறியுள்ளார். அர்னால்டும் ஐ எம் ரெடி என்று கூறி விட்டாராம்.

வேணாமப்பா வேணவே வேணாம்

வேணாமப்பா வேணவே வேணாம்

இந்தத் தகவல் குறிப்பிட்ட பிரமாண்ட இயக்குநரின் காதுகளுக்குப் போயுள்ளது. ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான நாகப் பாம்புகளை கிராபிக்ஸில் உருவாக்கி கண் முன் படம் எடுக்க வைத்தால் எப்படி இருக்குமோ அந்த எபக்ட்டுக்கு அதிர்ச்சியாகி விட்டாராம் அந்த இயக்குநர். இந்த சந்திப்பு நடக்கவே கூடாது என்று குறுக்கே பாய்ந்து தடுத்து விட்டாராம்.

படம் பஞ்சராகி விடுமே

படம் பஞ்சராகி விடுமே

இந்த சந்திப்புமட்டும் நடந்தால் முக்கியமான இடத்திலிருந்து தனது பிரமாண்டப் படத்திற்கு பஞ்சாயத்து வந்து விடும், குறி வைத்து பஞ்சராக்கி விடுவார்கள் என்று பயந்து போனதால்தான் இந்த சந்திப்பை தடுத்து விட்டாராம் இயக்குநர்.

இதனால் இயக்குநர் மீது ஏக காட்டத்தில் இருக்கிறதாம் திமுக தரப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X