நயன்தாராவைக் கடத்தணும்... விஜய் சேதுபதியின் விபரீத ஆசை!

சென்னை: வாய்ப்பு கிடைத்தால் நடிகை நயன்தாராவைக் கடத்துவேன் எனக் கூறி பரபரப்பை உண்டாக்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

'பீட்சா', நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் திறமையான நடிகர் என்ற இடத்தைப் பிடித்தார் நடிகர் விஜய் சேதுபதி. அப்படங்களைத் தொடர்ந்து 'சூதுகவ்வும்', 'பண்ணையாரும் பத்மினியும்' உள்ளிட் பல படங்களில் நடித்ததன் மூலம் வித்தியாசமான நடிகர் மற்றும் ஈகோ இல்லாத நடிகர் எனப் புகழப்படுகிறார்.

இந்நிலையில், சூது கவ்வும் படத்தில் நடித்ததற்காக சென்னையில் நடந்த விஜய் விருது வழங்கும் விழாவில் விஜய் சேதுபதிக்கும் விருது வழங்கப் பட்டது.

யாரைக் கடத்துவீர்கள்..?

யாரைக் கடத்துவீர்கள்..?

விருதைப் பெற மேடைக்கு வந்த விஜய் சேதுபதியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது சூது கவ்வும் படத்தில் வருவது போல், ஒரு பெண்ணை கடத்த வேண்டும் என்றால் யாரைக் கடத்துவீர்கள்? என்பது தான் அது.

நயன்தாரா...

நயன்தாரா...

சற்றும் தாமதிக்காமல் அக்கேள்விக்கு, ‘நயன்தாராவை கடத்துவேன்' என விஜய் சேதுபதி பதிலளித்தார். இப்பதிலைக் கேட்ட கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.

தேவதை...

தேவதை...

மேலும், ஏன் நயன்தாரா? எனக் கேட்கப் பட்டதற்கு, ‘அவரது அழகு தான் காரணம் எனப் பதிலளித்தார் விஜய் சேதுபதி. கூட்டத்தில் அமர்ந்து இதை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தார் நயன்தாரா.

அதிக சம்பளம்...

அதிக சம்பளம்...

அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் முதலிடத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. இதனால் அவர் விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் என பெரிய ஹீரோக்கள் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களில் மட்டுமே நடிக்கிறார்.

சிறு பட்ஜெட் நாயகர்கள்...

சிறு பட்ஜெட் நாயகர்கள்...

திறமையான நடிகையான அவருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும் பட்ஜெட் காரணமாக அந்த வாய்ப்பு சிறு பட்ஜெட் நாயகர்களுக்கு கை கூடாமல் போய் விடுகிறது.

எல்லாம் ஆதங்கம் தான்...

எல்லாம் ஆதங்கம் தான்...

விஜய் சேதுபதியும் இதுவரை பிரம்மாண்ட பட்ஜெட் படத்தில் எதுவும் நடிக்கவில்லை. எனவே, தன்னால் நயன்தாராவுடன் நடிக்க இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் தான் அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X