For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    3 வாரத்திலே டபுள் எவிக்ஷனா? இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேற போறது இவங்க தானா?

    |

    சென்னை: பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 3 வாரத்திலேயே டபுள் எவிக்‌ஷன் இருக்கப் போவதாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்த வாரம் எலிமினேட் ஆகப் போகும் அந்த இருவர் யார் என ரசிகர்கள் ஆருடம் பார்த்து வருகின்றனர்.

    அன் அஃபிஷியல் போலிங்கில் வந்துள்ள வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட்டை காலி செய்யப் போகும் அந்த இரு போட்டியாளர்கள் யார் என்பதை இங்கே அலசுவோம்.

    இந்த வாரமாவது அபிநய் வெளியேறுவாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    அரபிக் குத்து பாட்டுக்கு அபர்ணா தாஸ் போட்ட டான்ஸ்.. இன்ஸ்டாகிராமில் சும்மா ஹார்ட்டின்களை அள்ளுது!அரபிக் குத்து பாட்டுக்கு அபர்ணா தாஸ் போட்ட டான்ஸ்.. இன்ஸ்டாகிராமில் சும்மா ஹார்ட்டின்களை அள்ளுது!

    8 பேர் நாமினேஷனில்

    8 பேர் நாமினேஷனில்

    பாலாஜி முருகதாஸ், தாமரை, அனிதா சம்பத், ஜூலி, நிரூப், ஷாரிக், சினேகன் மற்றும் அபிநய் உள்ளிட்ட 8 பேர் இந்த வாரம் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளனர். இதில், பல போட்டியாளர்களுக்கு இரண்டு ரோஜாக்கள் கிடைத்தும் இந்த வாரம் இப்படி டபுள் எவிக்‌ஷனில் சிக்குவோம் என நினைத்து இருக்க மாட்டார்கள்.

    டபுள் எவிக்‌ஷன்

    டபுள் எவிக்‌ஷன்

    பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிக் பாஸ் வீட்டிலும் இதுதொடர்பான அறிவிப்பை பிக் பாஸ் குரல் மூலம் போட்டியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வாரம் வெளியேறப் போகும் அந்த இருவர் யார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    கடைசி இடத்தில் அபிநய்

    கடைசி இடத்தில் அபிநய்

    கடைசி இடத்தில் சினேகன் ஆரம்பத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அபிநய் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சினேகன் மற்றும் அபிநய்க்கு இடையே குறைந்த அளவிலான வாக்கு எண்ணிக்கைகள் வித்தியாசம் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இருவரில் ஒருவர் நிச்சயம் வெளியேறுவது உறுதி என்றும் கூறப்படுகிறது.

    யார் அந்த இருவர்

    யார் அந்த இருவர்

    இந்த வாரம் சினேகன் மற்றும் ஷாரிக் கடைசி இடத்தில் இருந்து வந்த நிலையில், தற்போது அன் அஃபிஷியல் வாக்குகளின் அடிப்படையில் சினேகன் மற்றும் அபிநய் தான் கடைசி இரு இடங்களை பிடித்துள்ளனர். ஷாரிக் சற்றே முன்னேறி உள்ளார். இந்நிலையில், இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் டபுள் எவிக்‌ஷன் நடத்தப்பட்டால் அபிநய் மற்றும் சினேகன் ஆகிய இருவரும் வெளியேறுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளன.

    Recommended Video

    Bigg Boss Ultimate Bala Suruthi மத்தியில் ஏற்பட்ட சண்டை | முன்னாடி Seasonல நீ ஒழுங்கா முற்றிய மோதல்?
    அபிநயை காப்பாற்றுவார்களா

    அபிநயை காப்பாற்றுவார்களா

    கடந்த பிக் பாஸ் சீசன் 5ஐ போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அபிநயை சேவ் பண்ண ஏதாவது தில்லாலங்கடி வேலைகளை பிக் பாஸ் டீம் பார்க்குமா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி ஏதாவது கோல்மால் செய்தால் இந்த வாரம் சினேகன் மற்றும் ஷாரிக் வெளியே செல்வார்கள் என்றும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    Abhinay and Snehan at the bottom of the Nomination list with less number of votes this week and more chances to eliminate both from the house due to double elimination.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X