தமிழ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது யார்.. விஜய் டிவி பரபரப்பு விளக்கம்!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி குறித்து பரவிய தகவல்கள் குறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

Recommended Video

Kamal hassan awareness video on #stayhomestayconnected | Oneindia Tamil

இந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சி முதன் முதல் 2006 ஆண்டு இந்தியில் தொடங்கப்பட்டது. இதுவரை இந்தியில் 13 சீசன்கள் கடந்துள்ளன.

இந்தியில் இந்நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, கன்னடா மற்றும் பெங்காலி மொழியில் 2013ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

கமல்ஹாசன்

கமல்ஹாசன்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 2017ஆம் ஆண்டு முதலும் மராத்தி மற்றும் மலையாளத்தில் 2018ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ளது. மூன்று சீசன்களையும் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

இதன் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியாவுக்கு அதிகளவில் ரசிகர்கள் இருந்தனர். அவர் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஆரவுடன் ஏற்பட்ட காதல் பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்று வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் சீசனில் ஆரவும், இரண்டாம் சீசனில் ரித்விகாவும் மூன்றாவது சீசனில் முகென் ராவும் டைட்டில் வின்னராயினர்.

பிக்பாஸுக்கு எதிர்ப்பு

பிக்பாஸுக்கு எதிர்ப்பு

இதில் பங்கேற்கும் பெரும்பாலான பிரபலங்கள் ஏதோ ஒரு வகையில் திரைத்துறைக்கு சம்பந்தம் உடையவர்களாகவும் அல்லது பிரபலமானவர்களாகவும் உள்ளனர். இதன் முதல் மூன்று சீசன்களும் பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்நிகழ்ச்சி தமிழ் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.

விலகல்?

விலகல்?

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவது சந்தேகம் தான் என்று தகவல் வெளியானது. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பணி, 'இந்தியன் 2' படப்பிடிப்பு என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் இம்முறை பிக்பாஸிலிருந்து விலகவும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.

விளக்கம்?

விளக்கம்?

அதோடு இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் கலர்ஸ் தொலைக்காட்சி சேனல்தான் தமிழிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்து விஜய் டிவி விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்குவார், விஜய் டிவிதான் ஒளிபரப்பும் என்றும் தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X