அரசியலில் ராதிகா.. இனிமே சித்தி இவங்கதான்! இன்னும் பல சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: சித்தி 2 சீரியலில் இனி ராதிகா கதாப்பாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்பது உள்ளிட்ட தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளன.
Recommended Video
தமிழ் சினிமா மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என மொத்த இந்திய சினிமா தொடர்பான அப்டேட்டுகளை வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் சினிமா தொடர்பான பல சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி கேஜிஎஃப் 2 படத்தின் தமிழ் உரிமையை ட்ரீம் வாரியர்ஸ் பெற்றிருப்பதாக கூறியுள்ளார் பிகே. இதேபோல் ராம் சரணை இயக்கும் இயக்குநர் ஷங்கரின் படத்திற்கான பட்ஜெட் தொகை எவ்வளவு என்ற தகவலையும் கூறியுள்ளார் பிகே.
மேலும் நடிகை டாப்ஸி பாலிவுட்டில் நடிகர் ஷாருக்கான் படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. நடிகை ராதிகா அரசியலுக்கு போனதால் இனி சித்தி 2 சீரியலில் நடிகை ரேகா நடிக்கவுள்ளார் என்றும் கூறியுள்ளார் பிகே.
மேலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஷூட்டிங்குக்காக படக்குழு ரஷ்யா சென்றுள்ள தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











