சாதா ஸ்டாரான ரஜினி: அப்போ அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?

By Siva

Recommended Video

அடுத்த சூப்பர் ஸ்டார் யாரு?- வீடியோ

சென்னை: சூப்பர் ஸ்டார் சாதா ஸ்டாராகிவிட்டதால் அந்த தலைப்பு யாருக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற விவாதம் அடிக்கடி எழுந்து அடங்குவது உண்டு. அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு கிளம்பினாலே எப்பொழுதுமே ஒரேயொரு சூப்பர் ஸ்டார் தான் அது எங்கள் தலைவர் தான் என்று ரஜினி ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டாரே அந்த பட்டத்தை சமூக வலைதளத்தில் இருந்து நீக்கிவிட்டார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

அரசியலுக்கு வரும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேண்டாம் என்று கூறி சாதா ஸ்டாராகிவிட்டார். அதனால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தளபதி

தளபதி

இளைய தளபதியாக இருந்த விஜய் தளபதியாகிவிட்டார். ரஜினியின் வழியில் காமெடி செய்வது, குழந்தைகளை கவர்வதுமாக உள்ள விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவாரா?

தல

தல

எந்த பட்டமும் வேண்டாம் என தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருக்கும் அஜீத்தை அவரது ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் கோதாவில் இறக்கிவிட்டுள்ளனர். அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் பெரிது அல்ல. ஆனால் அவரின் ரசிகர்கள் அதை எதிர்பார்க்கிறார்களே.

யங் சூப்பர் ஸ்டார்

யங் சூப்பர் ஸ்டார்

குட்டிப் பையனாக இருக்கும்போது லிட்டில் சூப்பர் ஸ்டாராக இருந்த சிம்பு வளர்ந்த பிறகு யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பயன்படுத்துகிறார். இனி யங்கை நீக்கிவிட்டு சூப்பர் ஸ்டாரை மட்டும் வைத்துக்கொள்வாரா?

நடிப்பு

நடிப்பு

நடிப்புக்கு பெயர் போன தனுஷ் மாமனாரின் பட்டம் தனக்கு தான் என்று பங்குக்கு வர மாட்டார். ஆனால் அந்த பட்டம் அவருக்கு வர வேண்டும் என்று அவரின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

சீயான்

சீயான்

கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த விக்ரமை அவரது ரசிகர்கள் சீயான், சீயான் என கொண்டாடுகிறார்கள். சூப்பர் ஸ்டார் பட்டம் சீயானுக்கு கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

குட்டீஸ் செல்லம்

குட்டீஸ் செல்லம்

விஜய்யை அடுத்து ரஜினி ஸ்டைலில் காமெடி செய்வது, குட்டீஸ்களை கவர காட்சிகள் வைப்பதுமாக உள்ளவர் சிவகார்த்திகேயன். ஏற்கனவே பெரிய குட்டீஸ் படை தலைவனாக இருக்கும் அவரும் சூப்பர் ஸ்டார் ரேஸில் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X