இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவது இவர் தான்..ஷாக்கான ரசிகர்கள்!

சென்னை : இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ராபர்ட் மாஸ்டர், ஷிவின் கணேசன், அஸீம், ஆயிஷா, மணிகண்டன், ரச்சிதா, ராம்,ஏடிகே, அமுதவாணன், கதிரவன், குயின்ஸி, நிவாசினி, தனலட்சுமி, விக்ரமன் ஆகியோர் உள்ளனர்.

ஜிபிமுத்து, சாந்தி,அசல் கோலார், ஷெரினா, மகேஸ்வரி என இதுவரை 5 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.

பிக் பாஸ் சீசன் 6

பிக் பாஸ் சீசன் 6

அக்டோபர் மாதம் 9ந் தேதி கோலாகலமாக தொடங்கி பிக் பாஸ் நிகழ்ச்சி 40 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே சண்டை,அடிதடி தள்ளுமுள்ளு, வாக்குவாதம் என சுவாரசியம் குறையாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. கமல் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சாட்டையை சுழற்றி போட்டியாளர்களை சும்மா தெறிக்கவிடுகிறார்.

டேஞ்சர் ஜோனில்

டேஞ்சர் ஜோனில்

இந்த வாரம் நடந்த நாமினேஷன் பிராசசில் அசீம், தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, ராபர்ட், ஆயிஷா, நிவாஸினி, ஆகிய ஏழு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இருக்கிறார்கள். இதில் நிவாஷினி, ஆயிஷா,ராபர்ட் மற்றும் குயின்ஸி ஆகிய நால்வரும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் ஜோனில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நால்வரில் யார் வேண்டுமானாலும் இந்த வாரம் வெளியேற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

வெளியேறினார்

வெளியேறினார்

ராபர்ட் மாஸ்டர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததை மறந்துவிட்டு ரச்சித்தா பின் சுற்றி வருவதால், அவர் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது. ஆனால், ராபர்ட் மாஸ்டரை விட நிவாஷினி தான் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிவாஷினி விளையாட்டை சரியாக விளையாடாமல் பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்தே அசல் கோலாருடன் சுற்றி பெயரை கெடுத்துக்கொண்டார். அசல் வெளியேறிய பின்பும் நிவா சிறப்பாக விளையாட வில்லை என்பதால் மக்கள் அவருக்கு வாக்கு அளிக்கவில்லை.

மக்களின் ஆதரவு

மக்களின் ஆதரவு

அதேபோல மற்ற போட்டியாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டாலும் மக்களின் ஆதரவு அசீமுக்கு அதிகம் இருப்பதால் அவர் அதிக வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அசீமை அடுத்து தனலட்சுமி மற்றும் ஜனனி அதிக வாக்குகள் பெற்றுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X