Don't Miss!
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- News சமாளிக்கவே முடியல.. மிகப் பெரிய பிரச்சினை! முதல்வருக்கு பறந்த கடிதம்.. அன்புமணி கொடுக்கும் ஐடியா!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்!
Recommended Video
சென்னை: கைதி இந்தி ரீகேக்கில் நடிக்க இரண்டு ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
கார்த்தி, நரேன், தீனா, ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ், ரமணா, ஹரிஷ் உத்தமன் உட்பட பலர் நடித்த படம், கைதி.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.பிரகாஷ்பாபு தயாரித்திருந்த இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ்.இசை அமைத்திருந்தார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
'அதை மட்டும் பண்ணாம இருந்திருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன்..' சீரியசாக சொல்கிறார் நடிகை சமந்தா
கதாநாயகி இல்லாமல்
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆனது. தமிழில் சூப்பர் ஹிட்டான இந்தப் படம், தெலுங்கில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. அங்கும் ஹிட்டானது. கதாநாயகி இல்லாமல் உருவான இந்தப் படத்தின் வெற்றி, திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்தது.
ரிலையன்ஸ் நிறுவனம்
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. கைதி படத்தின் இந்தி ரீமேக் உரிமையை வாங்க கடும் போட்டி நிலவியது. இந்நிலையில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியில் கைதி படத்தை தயாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் இது உறுதி செய்யப்பட்டது.
கார்த்தி மறுப்பு
இந்தி 'கைதி'யையும் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் நடிக்கும் நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இந்தி ரீமேக்கிலும் நடிகர் கார்த்தியை நடிக்க வைக்கத்தான் முயற்சி நடந்ததாம். ஆனால், அவர் மறுத்துவிட்டார். ஏனென்றால் ரத்த சரித்திரம் படம் மூலம் அவர் அண்ணன் சூர்யா, இந்திக்குச் சென்றார். அந்தப் படம் பெரிய ஹிட்டாகவில்லை. இதைக் கண்டே, கார்த்தி மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
சல்மான்கான்
இந்நிலையில் இதன் இந்தி ரீமேக்கில் பிரபல இந்தி ஹீரோ, சல்மான்கான் நடிக்க இருப்பதாக, சமூக வலை தளங்களில் தகவல் பரவியது. ஆனால், அது உறுதிப்படுத்தப் படவில்லை. இதுகுறித்து எஸ்.ஆர்.பிரபு கூறும்போது, 'இந்தி ரீமேக்கில் பெரிய ஹீரோ ஒருவர் நடிப்பார். ஆனால், யாரும் இறுதி செய்யப்படவில்லை' என்று கூறியிருந்தார்.
ரன்வீர் சிங், ஹிர்த்திக்
இதற்கிடையே, இந்த படத்தின் ரீமேக்கில் ஹிர்த்திக் ரோஷன் அல்லது ரன்வீர் சிங் ஆகியோரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. இதுபற்றி, 'இருவரும் ரிலையன்ஸ் நிறுவனத்தின், சாய்ஸில் இருக்கிறார்கள். கால்ஷீட் மற்றும் சம்பள பிரச்னை சரியாக அமைந்தால் இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பார். பேச்சுவார்த்தை நடந்துவருகிறது படக்குழு தெரிவித்துள்ளது.
-
கில்லி த்ரிஷா ரோலில் நான் நடிக்க வேண்டியது..லவ் பண்ணிட்டு இருந்ததால் மிஸ்ஸாகிடுச்சு..கிரண் வேதனை!
-
Baakiyalakshmi: கலர் கலராக சட்டைகள் போட்டு போட்டோஸ்.. பழனிச்சாமியின் புகைப்படங்களை பார்த்த பாக்கியா!
-
வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!