பிக்பாஸ் டைட்டிலை இவர்தான் வெல்வார்.. என்னுடைய ஆதரவும் இவருக்குதான்.. முன்னாள் போட்டியாளர் அதிரடி!

சென்னை: பிக்பாஸ் சீசன் 4 டைட்டிலை வெல்ல போவது யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர் கணித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

வரும் 17 ஆம் தேதி இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே பிரமாண்டமாக நடை பெறவுள்ளது.

பெரும் மன உளைச்சல்

பெரும் மன உளைச்சல்

இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல போவது யார் என்ற விவாதமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் சம்பவங்கள் ரசிகர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்துள்ளது.

எகிறும் ரசிகர்களின் பிபி

எகிறும் ரசிகர்களின் பிபி

குறிப்பாக ஃபிரீஸ் டாஸ்க்குக்கு பிறகு ஹவுஸ்மேட்ஸ் ஆரியை டேமேஜ் செய்ய செய்யும் வேலைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதிலும் பாலாஜி நடந்து கொள்ளும் விதம் ரசிகர்களின் பிபியை எகிற வைத்து வருகிறது.

பாலாஜி வன்மம்

பாலாஜி வன்மம்

தான் வாங்காவிட்டாலும் பரவாயில்லை ஆரி மட்டும் டைட்டிலை ஜெயிக்கக்கூடாது என்று பாலாஜி கூறியது அவர் மனதில் ஆரி மீது உள்ள வன்மத்தை பச்சையாய் காட்டியது. பிக்பாஸ் போட்டியாளர்களில் நேர்மையாகவும் நிதானமாகவும் விளையாடி வருகிறார் ஆரி.

ஆரிக்கு அருகில் யாரும் இல்லை

ஆரிக்கு அருகில் யாரும் இல்லை

இதனால் டைட்டிலை ஜெயிக்கும் போட்டியாளர்களில் பட்டியலில் ஆரிக்கு அருகில் ஒரு போட்டியாளர் கூட இல்லை. நிகழ்ச்சியின் இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஆரிக்கு சமமாக போட்டியாளர்களால் வரமுடியுமா என்பது சந்தேகமே.

புரிந்து கொள்ளவில்லை

புரிந்து கொள்ளவில்லை

இப்போது வரை ஆரியை புரிந்துகொள்ளாமல் அவரை அவமனாப்படுத்துவதையும் டார்கெட் செய்வதையும் மற்றவர்களின் குறையை மட்டுமே சொல்லி விளையாடுகிறார் என்று தவறாக புரிந்து கொண்டுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

பேசுவது மன்னிப்பு கேட்பது

பேசுவது மன்னிப்பு கேட்பது

இருக்கும் நாட்களிலாவது ஆரியிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம் என்று இல்லாமல் அவரின் தவறுகளை காட்டுகிறோம் என மேலும் மேலும் தங்களை டேமேஜ் செய்து வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ். பாலாஜி தரக்குறைவாக பேசுவதையும் பின்னர் மன்னிப்பு கேட்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஆரிக்கே ஆதரவு

ஆரிக்கே ஆதரவு

ஆனால் அது நடிப்பு என்பதை சரியாக புரிந்து வைத்துள்ள ரசிகர்கள் ஆரிக்குதான் டைட்டிலை கொடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் ஆரிக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

அந்த வகையில் கடந்த சீசன் போட்டியாளரான ரேஷ்மா பசுப்புலேட்டி, தான் ஆரிக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர் டைட்டிலை வெல்வார் என்றும் கூறியுள்ளார். அவரது இந்த கருத்து ஆரியின் ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளது. ரசிகர்களையும் நிம்மதியடைய செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X