சிம்புவும் பிஸி.. பிக் பாஸ் சீசன் 8ஐ அப்போ தொகுத்து வழங்கப்போவது அந்த பிரபலம் தானா?
சென்னை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியை 17 சீசன்களாக சல்மான் கான் தொகுத்து வழங்கிய நிலையில், 7 சீசன்களோடு ஆளவிடுங்கப்பா சாமி என ஆள்வார்ப்பேட்டை ஆண்டவர் நைஸாக கழண்டு கொண்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியை உலக நாயகனே தொகுத்து வழங்குகிறார் என ஆரம்பத்தில் பல சினிமா பிரபலங்கள் போட்டியாளர்களாக உள்ளே நுழைந்தனர்.
நடிகர்கள், நடிகைகள் என பலரும் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில், கமல்ஹாசனும் ஜாலியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். ஒரு படத்தில் நடிக்கக் கிடைக்கும் சம்பளத்தை விட பிக் பாஸ் ஹோஸ்ட்டாக கமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கூடுதல் சம்பளம் அவருக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஏற்கனவே விக்ரம் படத்தின் இறுதி படப்பிடிப்பின் போது இதே போல பிக் பாஸ் அல்டிமேட் எனும் ஓடிடி நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலக நடிகர் சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிம்பு தொடரவில்லை: ஆனால், அடுத்த சீசன் பிக் பாஸ் வந்ததும் மீண்டும் கமல்ஹாசனே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார். விக்ரம் படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் இந்த பக்கம் வரமாட்டார் என நினைத்தவர்களுக்கு மறுபடியும் கமல் வந்து விட்டாரே என்கிற கடுப்பும் ஏற்பட்டது. அதிகளவில் கமல்ஹாசனுக்கு எதிரான ட்ரோல்கள் குவியத் தொடங்கின. போட்டியாளர்களை விட போன சீசனில் அதிகம் ட்ரோல்களை சந்தித்தது கமல்ஹாசன் தான். சிம்புவும் பாலாஜி முருகதாஸுக்கு டைட்டில் கொடுத்து விட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடராமல் விலகி விட்டார்.
நல்ல முடிவு: கமல்ஹாசன் வரும் பிக் பாஸ் சீசன் 8ல் பங்கேற்க மாட்டேன் என அறிவித்த நிலையில், அவரது பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட ரசிகர்கள் நல்ல முடிவு தான் என்றும் ரெஸ்ட் எடுங்க கமல் சார் என்றும் சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துங்க ஆண்டவா என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

அடுத்த ஹோஸ்ட் யார்?: கமல்ஹாசன் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது ராஜமாதா ரம்யா கிருஷ்ணன் ஒரே ஒரு எபிசோடை தொகுத்து வழங்கினார். கமல்ஹாசன் வரும் சீசனை தொகுத்து வழங்கப் போவது இல்லை என்றதும் அடுத்து சிம்பு தொகுத்து வழங்குவாரா? என்று பார்த்தால் அவரும் தக் லைஃப் மற்றும் எஸ்டிஆர் 48 உள்ளிட்ட படங்களில் பிஸியாக உள்ளார். ரம்யா கிருஷ்ணன் அல்லது சரத்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. இவர்களை தவிர யங் அண்ட் எனர்ஜெடிக்காக ஒரு நபர் வந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினால் நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விரைவில் அறிவிப்பு: கமல்ஹாசன் இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாகவே புது ஹோஸ்ட் ரெடியாகியிருப்பார் என்றும் பிக் பாஸ் புரமோ ஷூட்டும் விரைவில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. கூடிய சீக்கிரமே அடுத்த ஹோஸ்ட் யார் என்கிற அறிவிப்பை விஜய் டிவி வெளியிடும் என்றும் இந்த வருஷம் போட்டியாளர்கள் லிஸ்ட்டிலும் விஜய் டிவி கவனம் செலுத்தி கமல்ஹாசன் இல்லாத இடத்தை நிரப்ப நிகழ்ச்சியில் அதிக கவனத்தை செலுத்தும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications