சக்திமான் படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கும் சோனி நிறுவனம்.. இந்த இருவரில் ஒருவர் தான் ஹீரோவா?

சென்னை: முகேஷ் கன்னா நடிப்பில் வெளியான சக்திமான் டிவி தொடர் நீண்ட காலமாக படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், அதற்கான அறிவிப்பு தற்போது பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.

90ஸ் கிட்ஸின் முதல் இந்தியன் சூப்பர் ஹீரோவான சக்திமான் மீது எப்போதுமே இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய கிரேஸ் இருக்கத்தான் செய்கிறது.

பிரபல வெளிநாட்டு தயாரிப்பு நிறுவனம் தற்போது இந்திய படங்களின் மீது ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், சக்திமான் தொடரை படமாக்கும் முயற்சியிலும் களம் இறங்கி உள்ளது.

சக்திமான்

சக்திமான்

1997ம் ஆண்டு டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய சக்திமான் தொடர் 2005ம் ஆண்டு நிறைவடைந்தது. இந்தியா முழுவதும் சக்திமான் டிவி தொடருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கன்னா இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ என கொண்டாடப்பட்டார். சக்திமான் சொல்லும் அறிவுரைகளையும் சிறுவர்கள் அப்படியே கேட்ட காலம் எல்லாம் 90ஸ் கிட்ஸ்களால் இன்றும் மறக்க முடியாது.

முகேஷ் கன்னா முயற்சி

முகேஷ் கன்னா முயற்சி

முகேஷ் கன்னாவின் பீஷ்ம் இன்டர்நேஷனல் நிறுவனம் பல ஆண்டுகளாக சக்திமானை திரைப்படமாக உருவாக்க முயற்சி செய்து வருகிறது. முகேஷ் கன்னாவுக்கு வயதான நிலையில், பாலிவுட் நடிகர்களை வைத்து சக்திமான் படத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியதெல்லாம் வீண் முயற்சியாகவே மாறியது.

சோனி நிறுவனத்துடன் இணைந்து

சோனி நிறுவனத்துடன் இணைந்து

ஆனாலும், தனது முயற்சியை விடாமல் தொடர்ந்து செய்து வந்த நிலையில், தற்போது சோனி நிறுவனத்துடன் கைகோர்த்து பிரம்மாண்ட படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளார். தற்போது அதன் பிரத்யேக அறிவிப்பு அடங்கிய வீடியோ மீண்டும் சக்திமானை திரையில் பார்க்கும் ஆசையை ரசிகர்கள் மனதில் தூண்டியுள்ளது.

இந்திய படங்கள் மீது

இந்திய படங்கள் மீது

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை கமல்ஹாசன் மற்றும் சோனி நிறுவனம் இணைந்து தயாரித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் கனவு படமான மருதநாயகம் படத்தையும் சோனி நிறுவனம் உருவாக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில், சோனி நிறுவனம் சக்திமான் படத்தின் பணிகளை தொடங்கி இருப்பது இந்திய படங்கள் மீதான அதன் அக்கறையை காட்டுகிறது.

சக்திமான் பட அறிவிப்பு

சக்திமான் படம் விரைவில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகப் போவதாக சோனி நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் பட அறிவிப்பு வீடியோவுடன் புதிய புரமோவை வெளியிட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தி உள்ளது. முகேஷ் கன்னாவுக்கு பதில் யார் இந்த படத்தில் சக்திமானாக நடிக்கப் போகிறார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பாகுபலி பிரபாஸா?

பாகுபலி பிரபாஸா?

பாலிவுட் நடிகர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் அதிக மார்க்கெட்டை உயர்த்தி உள்ள டோலிவுட் நடிகர் பிரபாஸ் இந்த படத்தில் நடிக்க வைக்க பேச்சுக்கள் எழுந்து வருவதாக கூறப்படுகிறது. ஆதிபுருஷ் படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், சக்திமானாக பிரபாஸ் நடிப்பாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

அல்லு அர்ஜுன்

அல்லு அர்ஜுன்

பிரபாஸ் மட்டுமின்றி இன்னொரு டோலிவுட் நடிகர் பெயரும் சக்திமான் கதாபாத்திரத்திற்கு அடிபட்டு வருகிறதாம். அவர் வேறு யாருமில்லை. புஷ்பா படத்தின் மூலம் பாலிவுட் பாக்ஸ் ஆபிஸிலேயே 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிய நிலையில், அல்லு அர்ஜுனை சக்திமானாக நடிக்க வைக்கவும் திட்டமிட்டு வருகிறது சோனி நிறுவனம் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் நடிக்கப் போகிறாரா? அல்லது டோலிவுட் நடிகர்களில் ஒருவர் நடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X