#தலைவர்169 படத்தை தயாரிக்கவுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம்! இவர் தானா இயக்குனர்!?
சென்னை: அண்ணாத்த படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனை செய்ய ரஜினி அமெரிக்கா சென்றார்.
கடந்த மாதம் அமெரிக்கா சென்ற ரஜினி கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை வந்தடைந்தார்.
அண்மையில் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து அரசியல் வருகை குறித்து முற்று புள்ளி வைத்துள்ளார்.

அண்ணாத்த படப்பிடிப்பு
தற்போது சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். 2020ம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவர வேண்டிய அண்ணாத்த திரைப்படம் பல இன்னல்களை சந்தித்து இது வரை வெளிவராமல் உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி நவம்பர் 4, 2021 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் விரைவில் வெளிவரவுள்ளது.

169வது படம்
இதையடுத்து சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தை இயக்கும் இயக்குனர் யாரென்ற கேள்வி இருந்து வந்தது. ஒருபுறம் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார் என சில தகவல்கள் வெளியாகின. மறுபுறம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என சில தகவல்கள் வந்தன.

பாராட்டிய ரஜினி
முன்னர் தேசிங்கு பெரியசாமியின் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார், தொலைபேசியில் தேசிங்கு பெரியசாமியை அழைத்து பாராட்டினார். அப்போதே தனக்கும் ஒரு கதையை தயார் செய்ய சொன்னார். எனவே #தலைவர்169 படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க நிறைய வாய்ப்புள்ளது என தகவல்கள் உறுதியளித்தன.

தயாரிப்பு நிறுவனம்
அதன்படி சூப்பர் ஸ்டாரின் 169வது படத்தை இயக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை AGS ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என பேசப்படுகிறது. இந்த தகவல் கிட்டத்தட்ட உறுதியான நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











