பேயுடன் பலப்பரிட்சை நடத்தும் டான்... வெல்லப்போவது யார்!

விஜய் சேதுபதியின் ஜுங்கா திரைப்படமும், திரிஷா நடித்துள்ள மோகினி திரைப்படமும் ஒரே நாளில் ரிலீசாகின்றன.

Recommended Video

நாளை வெல்ல போவது விஜய் சேதுபதியா அல்லது த்ரிஷாவா?- வீடியோ

சென்னை : விஜய் சேதுபதி டானாக நடித்துள்ள ஜூங்கா படம், திரிஷா பேயாக நடித்துள்ள மோகினி படம் என தமிழ் சினிமாவின் இரண்டு முக்கிய படங்கள் நாளை ரிலீசாக இருக்கின்றன.

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, கோகுல் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ஜூங்கா. டான் கதைக்களத்தை காமெடி கலந்து சொல்லியிருப்பதால், படத்திற்கு பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதேபோல், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மோகினி படத்தையும் மக்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். இப்படத்தில் திரிஷா பேயாக நடித்துள்ளார்.

மோகினி:

மோகினி:

ஜூங்கா, மோகினி என இருபெரும் நட்சத்திரங்களின் படங்கள் நாளை ஒரே நாளில் ரிலீசாக இருக்கின்றன. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இதேபோல், ஒரு நாள் வித்தியாசத்தில் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கமும், சிவாவின் தமிழ்ப்படம் 2வும் ரிலீசானது.

கடைக்குட்டி சிங்கம்:

கடைக்குட்டி சிங்கம்:

வெவ்வேறு வகையில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு படங்களுக்கும் மக்களிடையே நல்ல விமர்சனமும், வசூல் ரீதியாக வெற்றியும் கிடைத்துள்ளது. குறிப்பாக கடைக்குட்டி சிங்கம் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது.

பேயுடன் மோதும் காமெடி:

பேயுடன் மோதும் காமெடி:

இந்நிலையில், ஜூங்கா, மோகினி என விஜய் சேதுபதி, திரிஷா படங்கள் நாளை ரிலீசாக இருக்கின்றன. இவையும் ஒன்று காமெடி டான் கதை, மற்றொன்று நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திகில் பேய்க்கதை.

வரவேற்பு:

வரவேற்பு:

முன்னதாக விஜய் சேதுபதி நடித்த டான் படங்கள் அனைத்துமே வெற்றி அடைந்ததால், ஜூங்காவும் நிச்சயம் நல்ல விமர்சனங்களைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதேபோல், சமீபகாலமாக பேய் படங்களுக்கும், நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

பேயா... டானா...

பேயா... டானா...

எனவே, நாளை ரிலீசாகும் இந்த இரண்டு படங்களில் பேய், டானை வெல்வாரா, இல்லை டானை பேயை வெல்வாரா என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை பேயையும், டானையும் கை குலுக்க வைத்து, இரண்டையும் மக்கள் வெற்றிப் படங்கள் ஆக்கினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சண்டையிடும் ரீல் ஜோடி

சண்டையிடும் ரீல் ஜோடி

நாளை தங்களது படங்கள் மூலம் மோதிக் கொள்ளும் விஜய் சேதுபதியும், திரிஷாவும் அடுத்ததாக 96 படத்தில் ஜோடியாக கை கோர்த்து நடித்து வருகின்றனர். வித்தியாசமான கதைக்களம் கொண்ட இந்தப் படத்தை, 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X