யாரை திருமணம் செய்யலாம்.. ஆப்ஷன் கொடுத்து கேட்ட பிக்பாஸ் பிரபலம்.. விளாசி தள்ளிய நெட்டிசன்ஸ்

சென்னை: யாரை திருமணம் செய்துகொள்வது என ஆப்ஷன் கொடுத்து கேட்ட பிக்பாஸ் பிரபலத்தை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

Recommended Video

பாத்ரூமிலிருந்து ஹாயாக வீடியோ வெளியிட்ட நடிகை.. தெற்கின் பூனம் பாண்டே என புகழ்ந்த நெட்டிசன்ஸ்! - வீடியோ

தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலான இவர் பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் சக போட்டியாளரான இயக்குநர் சேரன், தன்னை தவறான எண்ணத்தில் தொட்டதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

பிக்பாஸ்

பிக்பாஸ்

அவர் கூறியது பொய்யான குற்றச்சாட்டு என குறும்படம் போட்டு விளக்கினார் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல்ஹாசன். இதனை தொடர்ந்து மக்களின் கோபத்திற்கு ஆளான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய மீரா மிதுன், தமிழ் சினிமா மற்றும் சினிமா பிரபலங்களையும் விளாசினார்.

திட்டும் நெட்டிசன்ஸ்

திட்டும் நெட்டிசன்ஸ்

பட வாய்ப்புகள் இல்லாததால் தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அரை நிர்வாணம், நிர்வாணம் என அவர் வெளியிடும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தீயாய் பரவி வருகிறது. எல்லை மீறும் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்க்கின்றனர்.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மீரா மிதுன் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் கடந்த சில நாட்களாய் பாலிவுட் பிரபலங்கள் கூட தன்னை பார்த்து காப்பியடித்துதான் போட்டோ ஷுட்டுக்களை நடத்துகின்றனர் என முன்னணி நடிகைகளின் போட்டோக்களை ஷேர் செய்து தெறிக்கவிட்டார்.

நடிகரா? தொழிலதிபரா?

நடிகரா? தொழிலதிபரா?

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகை காட்டி படு கிளாமரான போட்டோவை வெளியிட்டுள்ள மீரா மிதுன், நான் யாரை திருமணம் செய்துகொள்ளலாம்? ஒரு நடிகரையா? டான்ஸரையா? தொழிலதிபரையா? அல்லது ஒரு மாடலையா என கேட்டுள்ளார். அதற்கு பல விதத்தில் நெட்டிசன்கள் ரிப்ளை செய்துள்ளனர்.

பணம்தான் முக்கியமா?

பணம்தான் முக்கியமா?

மீரா மிதுனின் இந்த போஸ்ட்டை பார்த்த இந்த நெட்டிசன், நீங்கள் ஒரு பாப்புலர் பர்சனை திருமணம் செய்து கொள்வதற்கு பதில் ஒரு நல்ல மனிதரை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? உங்களுக்கு பணம்தான் முக்கியமா என கேட்டுள்ளார். அவரது இந்த பதிலை 200க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். மேலும் நல்லா கேட்டீர்கள் என்றும் பலர் பாராட்டியுள்ளனர்.

நக்கல் பதில்

நக்கல் பதில்

மற்றொரு நெட்டிசனான இவர், மீரா மிதுனின் கேள்விக்கு நக்கலாக பதிலளித்துள்ளார். அதாவது, நீங்கள் ஏன் ஒரு போஸ்ட் மேனையோ அல்லது பால்காரரையோ அல்லது ஒரு விவசாயியையோ திருமணம் செய்து கொள்ளக்கூடாது என கேட்டுள்ளார். அவரது கேள்வியையும் நெட்டிசன்கள் பலர் பாராட்டியுள்ளனர்.

ஏற்கனவே திருமணம்

ஏற்கனவே திருமணம்

இன்னும் சில நெட்டிசன்கள் தங்களை திருமணம் செய்து கொள்ளுங்கள் என பதில் தெரிவித்துள்ளனர். பலர் செய்யும் தொழிலை வைத்துதான் திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்டுள்ளனர். பலர் எத்தனை திருமணம் செய்வீர்கள் என கேட்டுள்ளனர். நடிகை மீரா மிதுன் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X