செலவு எகிறுதாமே சீமராசாவுக்கு?
Recommended Video

சிவகார்த்திகேயன் நடிக்க பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவதாக தயாராகும் படம் சீமராஜா. இதன் ஃபர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. சமந்தா, சிம்ரன், நெப்போலியன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்தாலே பிளாக்பஸ்டர் என்பது கண்கூடான உண்மை. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என்று இரண்டு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்றன. சிவகார்த்திகேயன் வளர்ச்சியில் பொன்ராமுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்த வகையில் சீமராசஜாவுக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது.

இன்னொரு பக்கம் சீமராஜா படத்துக்கு செலவு அதிகமாகிக்கொண்டே போகிறதாம். இரண்டு படங்களை குறைந்த பட்ஜெட்டில் கொடுத்த கூட்டணியா இது என்று வியக்கும் வகையில் செலவு எகிறுகிறதாம். 60 நாட்கள் படப்பிடிப்பு குற்றாலம், தென்காசி பகுதிகளில் முடிந்த நிலையில் சென்னையில் பிரம்மாண்ட செட் போட்டிருக்கிறார்கள்.
பட்ஜெட் அதிகமாவதை பார்த்தால் வேலைக்காரன் அளவுக்கு பிசினஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்துவிடுவார்கள் போல என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











