என்னது ப்ளூ சட்டை மாறன் ஒரு படத்தை பாராட்டி விமர்சனம் செய்ய ஒரு கோடி கேட்கிறாரா? அவரே போட்ட ட்வீட்!
சென்னை: ப்ளூ சட்டை மாறன் மற்றும் பார்த்திபன் இடையே இந்த வாரம் மிகப்பெரிய மோதல் வெடித்து உள்ளது.
கடந்த வாரம் பொன்னியின் செல்வன் பற்றியும் இயக்குநர் மணிரத்னம் பற்றியும் ப்ளூ சட்டை மாறன் போட்ட விமர்சனங்களுக்கும் எதிர்மறையான ட்வீட்டுகளையும் அவர் பொருட்படுத்தாத நிலையில், எந்த பிரச்சனையும் எழவில்லை.
ஆனால், தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் ட்வீட்களுக்கும் விமர்சனங்களுக்கும் விளக்கம் அளித்து வரும் பார்த்திபனுக்கும் மாறனுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.

பார்த்திபன் vs ப்ளூ சட்டை மாறன்
கடந்த வாரம் வெளியான இரவின் நிழல் படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அந்த படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் படமில்லை. ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் முதல் நான் லீனியர் படம் என ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட் சர்ச்சையை கிளப்பியது. அதற்கு பார்த்திபன் விளக்கம் கொடுத்து பல ட்வீட்களை போட பிரச்சனை பெரிதானது.

ப்ளூ சட்டை மாறனுக்கு செருப்பு மாலை
தொடர்ந்து பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இடையே சண்டை எழுந்த நிலையில், பார்த்திபனின் ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்தும், உருவ பொம்மையை எரித்தும் நிகழ்த்திய போராட்டங்கள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தின. சினிமா விமர்சகர்களை இப்படி செய்யக் கூடாது என ப்ளூ சட்டை மாறனுக்கு ஆதரவாக சில மூத்த பத்திரிகையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பார்த்திபன் கண்டிக்கவில்லை
அதே நேரம், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் ரசிகர்கள் செருப்பு மாலை அணிவித்ததை கண்டிக்காமல், அவர்களை மேலும், தூண்டும் விதமாக பேசி வருகிறார் என்றும் ப்ளூ சட்டை மாறன் பார்த்திபன் பேசிய வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து சிறப்பு சார் என கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். ப்ளூ சட்டை மாறன் போடும் ட்வீட்களுக்கு கீழ் பார்த்திபன் ரசிகர்கள் வழக்கம் போல மாறனை விளாசித் தள்ளி வருகின்றனர்.

3 லட்சம் கேட்கிறாரு
"எனது படத்தை பாராட்டி பேச வேண்டுமெனில் மூன்று லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று ப்ளூ சட்டை மாறன் கூறியதாக தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் கூறினார் என பார்த்திபன் சொன்னதாக ஒரு ட்வீட்டை எடுத்துப் போட்டு கலாய்த்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

ஒரு கோடின்னு சொல்லுங்க
அடப்பாவி இவ்வளவு சின்ன அமவுன்ட்டைசொல்லி அசிங்கப்படுத்திட்டாரே.. ஒரு கோடின்னு பார்த்திபன் சார்கிட்ட அவர் சொல்லியிருக்கலாம். கொஞ்சம் கவுரதையா இருந்திருக்கும். பை தி பை.. அப்பேர்ப்பட்ட அமரகாவியம் எதுன்னு சொன்னா சீக்கிரம் பார்க்கலாம்.. அதை மட்டும் கேட்டு சொல்லுங்க சார் என மீம் போட்டு பார்த்திபனை மீண்டும் வம்பிழுத்து இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

நிஜமா அடி விழும்
30 லட்சமே உனக்கெல்லாம் ஓவர்.. 300 ரூபா கொடுத்தாலே போதும் என்றும், இந்த அடி நிஜமாக விழும்னு நினைக்கிறேன் என ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்தும் திட்டித் தீர்த்தும் வருகின்றனர். மேலும், சமீபத்தில் சாய் பல்லவியின் கார்கி படத்துக்கு நல்ல விமர்சனம் கொடுத்ததற்கு எவ்வளவு வாங்குனீங்க என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











