அடி பலமோ?.. லியோ 2ம் நாள் வசூலை அறிவிக்காத தயாரிப்பு நிறுவனம்.. உருட்டப்படும் தியரிகள்?
சென்னை: ஷாருக்கானே சூப்பர்ஸ்டார் ரஜினி போல ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு என லியோ படத்தின் முதல் நாள் அதிகாரப்பூர்வ வசூல் அறிவிப்பை பார்த்து ஆடிப்போயிருப்பார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

10 ஆயிரம் ஸ்க்ரீன்களில் வெளியான அந்த படம் பண்ணாத வசூல் சாதனையை லியோ அதை விட குறைவான ஸ்க்ரீன்களில் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளதாக அறிவித்தனர்.
ஆனால், 2ம் நாள் வசூல் அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் ஏன் ரெட் சில்லீஸ் போல தைரியமாக வெளியிடவில்லை என்கிற கேள்வியை அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் எழுப்பி அலப்பறையை கிளப்பி வருகின்றனர்.
முதல் நாள் 148.5 கோடி: லியோ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான எந்தவொரு இந்திய திரைப்படமும் பண்ணாத வசூல் சாதனையை படைத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அளவுக்கு வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என சொன்னாலும், அதற்கு வாய்ப்பு இருக்கும் என்றும் ஏனென்றால், முதல் நாள் புக்கிங்கை மட்டுமே முதலில் பல திரையரங்குகளும் ஓபன் செய்திருந்தனர். ஒட்டுமொத்த ரசிகர்களும் படத்தை பார்க்க டிக்கெட்டுகளை வாங்க வைத்து பின்னர் தான் அடுத்தடுத்த நாட்களுக்கான டிக்கெட் புக்கிங்கையே ஓபன் செய்திருந்தனர் என்றும் அதன் காரணமாகத்தான் முதல் நாள் அதிக வசூல் வந்திருக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர்.
2வது நாளில் பலத்த அடி: ஆனால், வெள்ளிக்கிழமையான 2வது நாள் விடுமுறை இல்லை என்பதால் 50 சதவீத வசூல் பாதியாக குறைந்து விட்டதாக கூறுகின்றனர். 2வது நாள் 100 கோடி வசூல் வந்திருந்தால் கூட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கும். ஆனால், 66 கோடி அளவு தான் வந்தது என்றும் அதனால் தான் தயாரிப்பாளர் பேட்டிகளில் கூட சந்தோஷமே இல்லாமல் அடக்கி வாசித்துள்ளார் என்கின்றனர். மேலும், படத்தை ஓட்டுவதற்காக லியோ வேறு பார்த்திபன் வேறு என ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் கதையையே மாற்றி சொல்லி வருகின்றனர்.

முதல் வார அறிவிப்பு: சனி மற்றும் ஞாயிறு வசூலுடன் சேர்த்து திங்கட்கிழமை ஒட்டுமொத்தமாக 300 கோடி வசூலை கடந்தது என முதல் வார அறிவிப்பை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட வாய்ப்புகள் உள்ளதாகவும், ஆனால், 6 நாட்களுக்கு பிறகு லியோ 2ம் வாரத்தில் ஜெயிலர் போலவோ, ஜவான் மற்றும் பதான் போலவோ ஓட வாய்ப்பில்லை என்கின்றனர். விமர்சனங்களை கடந்து மக்கள் விஜய்யின் லியோ படத்துக்கு என்ன மாதிரியான வரவேற்பை இந்த விடுமுறை நாட்களில் கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துத் தான் வசூல் நிலவரம் மாறும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications