Leo Box Office: லியோ அதிகாரப்பூர்வ வசூல் அறிவிக்காததற்கு இதுதான் காரணமா?.. எல்லாம் அவரோட கட்டளையாம்!
சென்னை: லியோ படத்தின் முதல் நாள் குறித்த முழுமையான வசூலை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வெளியிட்ட நிலையில், அது ஃபேக் பாக்ஸ் ஆபிஸ் என கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின.
மேலும், ஷாருக்கானின் ஜவான் வசூலை குறைவான தியேட்டர்களில் வெளியான லியோ எப்படி முறியடித்தது என்கிற கேள்விகளும் எழுந்தன.

அதன் பின்னர், இரண்டாம் நாளில் இருந்து தயாரிப்பு நிறுவனம் வசூல் அறிவிப்பை வெளியிடவே இல்லை இதற்கு பின்னணியில் அந்த பிரபலத்தின் கட்டளை இருப்பதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.
ஜெயிலர் வசூல் 525 கோடி தான்: ஜெயிலர் வசூலை ரஜினி ரசிகர்கள் 600 கோடி முதல் 700 கோடி வரை ஏற்றிக் கொண்டே செல்கின்றனர் என்றும் கடைசியாக சன் பிக்சர்ஸ் அறிவித்த அதிகாரப்பூர்வ வசூல் 525 கோடி தான் என விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை கலாய்த்து வருகின்றனர். அதே நேரத்தில் லியோ படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனம் முதல் நாளுக்கு பிறகு சொல்லாத நிலையில், 500 கோடி தாண்டியதாக எப்படி சொல்கின்றனர் என்று தான் தெரியவில்லை என ரஜினி ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் அசிங்கப்படுத்தி வருகின்றனர்.
அடக்கி வாசிக்கும் லலித் குமார்: முதல் நாளில் இந்தியாவிலேயே இந்த ஆண்டு வெளியான படங்களிலேயே லியோ திரைப்படம் தான் முதல் நாளில் 148.5 கோடி ரூபாய் வசூல் ஈட்டி முதலிடத்தை பிடித்துள்ளதாக அறிவிப்பு வீடியொவை வெளியிட்டு மாஸ் காட்டினார். ஆனால், அதன் பின்னர் அப்படியே ஆஃப் ஆகி அடக்கி வாசித்து வருகிறாரே அதற்கு என்ன காரணம் என விசாரித்தால், சூப்பரான உருட்டை உருட்டி வருகின்றனர்.

விஜய்யின் கட்டளையாம்: நடிகர் விஜய் தான் தினமும் வசூல் அறிவிப்பை வெளியிட வேண்டாம் என்றும் மொத்தமாக ஒரு வாரம் கழித்து வெளியிடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்துக்கு கட்டளை போட்ட நிலையில், அதை கருத்தில் கொண்டு இரண்டாம் நாள் உள்ளிட்ட இதுவரை 6 நாட்கள் கடந்தும் எந்தவொரு அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கமல் இருக்க காரணம் என்கின்றனர். இதையெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? என்று விஜய் ஹேட்டர்கள் கலாய்த்து வருகின்றனர். வெளிநாடுகள் மற்றும் தமிழ்நாட்டை தவிர்த்து பிற மாநிலங்களில் இருந்து எல்லாம் லியோ வசூல் நிலவரம் வெளியாகி வரும் நிலையில், படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவது உண்மை தான் என்று கூறும் நிலையில், வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஏன் அறிவிக்க தயங்குகின்றனர் என்கிற கேள்வியும் எழத்தான் செய்கிறது. விரைவில் அறிவிக்கிறார்களா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











