Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அர்ச்சனா கோபப்பட்ட அளவுக்கு ஒண்ணும் ஆஜீத் கோபப்படலையே.. அதுக்கெல்லாமா சேவ்.. என்னமோ போங்க!
சென்னை: கோழி பண்ணை டாஸ்க்கில் ஆஜீத் கோபப்பட்ட காரணத்திற்காக அவர் சேவ் செய்யப்படார், ரியல் ஆஜீத்தை ரசிகர்கள் ஒரு வழியாக பார்த்து ஓட்டுப் போட்டுள்ளனர் என கமல் பேசியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
சனிக்கிழமை எபிசோடில், ரியோவும் ஆரியும் சேவ் ஆனார்கள்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நிகழ்ச்சியின் இறுதியில் ஆஜீத் சேவ் செய்யப்பட போவதை முன்னதே அறிந்து கொண்ட கமல், ஆஜீத்தை புகழ்ந்தார்.
கடைசியா மொத்தப் பேருக்கும் சுத்திப் போட்டு கிளம்பிய அர்ச்சனா.. விர்ட்சுவல் ஹக் கொடுத்த பிக்பாஸ்!
அந்த 77 நாட்கள்
பிக் பாஸ் வீட்டில் இதுவரை சூப்பர் சிங்கர் ஆஜீத் 77 நாட்களை வெற்றிகரமாக கடந்து விட்டார். இன்னும் சில வாரங்கள் தாக்குப் பிடிப்பாரா? அடுத்த வாரமே கிளம்புவாரா என்பது தெரியவில்லை. முதல் வாரத்தில் இருந்தே இந்த கேள்வியை ரசிகர்களும் கேட்டு கேட்டு டயர்ட் ஆகிவிட்டனர். சூப்பர் சிங்கருக்கு ஓட்டுப் போட்ட ரசிகர்கள் அப்படியே இதுக்கும் ஓட்டுப் போட்டு வருகிறார்களா? இல்லை விஜய் டிவியின் கைவரிசையா?
சமாளித்த கமல்
இந்த வாரமும் ஆஜீத் எப்படி சேவ் செய்யப்பட்டார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி விடக் கூடாது என்பதற்காக நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே, பாலா ஆஜீத்தின் வாலை பிடித்து அவுட் ஆக்கியதும் அழுது புலம்பிய ஆஜீத்தை, அவரது கோபம் வெளி வந்துள்ளது. ஆஜீத் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளார் என பேசி நல்லாவே சமாளித்தார்.
அர்ச்சனா கோபப்படலையா?
ஆஜீத் 70 நாட்களுக்கு பிறகு லேசாக கோபப்பட்டு எட்டிப் பார்த்ததை கொண்டாடும் கமல், அர்ச்சனா இத்தனை நாட்கள் எத்தனை விதமான கேம் விளையாடி இந்த ஷோவை சுவாரஸ்யப்படுத்தி வந்தார், அவரை ஏன் வெளியே அனுப்பி விட்டீர்கள் என்கிற கேள்வியும் எழுகிறது.
பாலாவின் திட்டம்
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததில் இருந்தே அர்ச்சனா திட்டம் போட்டு தனது அணியினரை எப்படி காப்பாற்றி வந்தாரோ, அதே போல இந்த முறை அர்ச்சனாவின் பாணியை பின் பற்றி, ஆஜீத்தை உறியடிக்க வைத்தும், ரம்யா, ஆஜீத்துடன் பேசியும் ஆஜீத்தை பிக் பாஸ் நடிக்க வைத்தும் நல்லாவே சேவ் செய்துள்ளனர்.
ரசிகர்கள் அப்செட்
ஆனால், எப்படித்தான் அர்ச்சனாவை வெளியே அனுப்பிட்டு ஆஜீத், ஷிவானியை சேவ் பண்றாங்களோ தெரியவில்லை, ரொம்ப வொர்ஸ்ட் என பிக் பாஸ் நிகழ்ச்சியையும் கழுவி ஊற்றி வருகின்றனர். அர்ச்சனா எவிக்ஷன் நல்லது தான் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.