அவரு ஏன் சாப்பாட்ட வேஸ்ட் பண்ணாரு.. கிடைத்த கேப்பில் எல்லாம் ஆரியை பழித்தீர்க்கும் ரம்யா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மூன்று நாட்களாய் கடலை பருப்பு ஊறுவதாக கூறிய ஆரியை அவர் மட்டும் சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா என்று கேட்டு எகிறினார் ரம்யா.
பிக்பாஸ் வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை பொங்கல் செய்வதற்காக கடலை பருப்பை மாற்றி ஊற வைத்துள்ளார் அனிதா.
ஆனால் 3 நாட்கள் ஆகியும் அதை அவர் ஃபிரிட்ஜிலும் வைக்காமல் தூக்கியும் போடாமல் இருந்துள்ளார். இதனை கவனித்த ஆரி இன்றைய எபிசோடில் கேப்டனான பாலாஜியிடம் கூறினார்.

ஆரி ஏன் வேஸ்ட் பண்ணாரு?
இதனை தொடர்ந்து பெட் ரூமில் அமர்ந்திருந்த ரம்யாவிடம் இது குறித்து பேசினார் பாலாஜி. அப்போது, யார் சொன்னது என்று கேட்க ஆரி சொன்னார் என்றார் பாலாஜி. அதற்கு உடனடியாக பதில் சொன்ன ரம்யா, அவரு சாப்பாட்ட ஏன் வேஸ்ட் பண்ணாருன்னு போய் கேளுங்க என்றார்.

கொஞ்சமாக எடுத்திருக்கணும்
அதற்கு பாலாஜி, ரெண்டு பேருக்கு சேர்த்து சாப்பிட நீங்கள் அதிகம் வைத்து விட்டீர்கள், சாப்பிட முடியவில்லை என்று பதில் கூறினார். இதனைக் கேட்ட ரம்யா, ஷேர் பண்ண யாரும் வரவில்லை என்றால் கொஞ்சமாக எடுத்திருக்க வேண்டும் என சீறினார்.

திங்கள் கிழமையே கொட்டியாச்சு
மேலும் சமைக்காத பொருளை வேஸ்ட் பண்ணக் கூடாது சமைத்த சாப்பாட்டை வேஸ்ட் பண்ணலாமா என்று ஆரி மீது குறை சொன்னார். அப்போது பேசிய அனிதா 3 நாட்கள் இல்லை. ஞாயிற்றுக் கிழமை ஊற வைத்தேன் திங்கள் கிழமையே கொட்டியாச்சு என்றார்.

பொதுவாக சொன்னேன்
மேலும் யாராவது அதை ஃபிரிட்ஜில் எடுத்து வையுங்கள் என்றேன். யாரும் அதை கவனிக்கவில்லை என்றார். உடனே யாரிடம் சொன்னீங்க என்று பாலாஜி கேட்க, பெயரையெல்லாம் சொல்லவில்லை, இங்கிருந்து பொதுவாக சொன்னேன் என்றார் அனிதா.

மறைச்சுருக்க முடியாதா?
தொடர்ந்து இந்த விவகாரம் கார்டன் ஏரியாவிலும் தொடர்ந்தது. அப்போது பேசிய அனிதா, சின்னபிள்ளைத்தனமான இருக்கு. ரொம்ப இன்வெஸ்டிகேட் பண்ணுறாங்க. நான்தான் ஒத்துக்கிட்டேன்ல்ல, அதை எடுத்துக் கொட்டிட்டு என்னால மறைச்சுருக்க முடியாதா என்று கேட்டார்.

ஆரி மீது பழி போட்ட ரம்யா
அப்போது குறுக்கிட்ட ரம்யா, அங்கேயும் ஆரியை இழுத்து விட்டார். அதாவது, அவர் கிட்சன் டீமில் இருக்கும் போது எதையாவது வேஸ்ட் செய்துவிட்டால் யாரையாவது எடுத்து குப்பைத் தொட்டியில் போட சொல்லுவார். அவர் போட மாட்டார். என்னை ஒரு முறை போட சொன்னார் நான் போடவில்லை என அந்த இடத்திலும் ஆரி மீது பழி கூறினார்.


Click it and Unblock the Notifications











