கடைசியா சேவ் ஆனது பத்தி அபிஷேக் கண்டுக்கவே இல்லை பார்த்தீங்களா? என விவரமாகும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து மற்ற போட்டியாளர்களை ரிவ்யூ பண்ணி வந்த அபிஷேக் ராஜா நாம ஏன் கடைசியா சேவ் ஆனோம் என்பது பற்றியும் அடுத்த வாரம் நாம வெளியே போய்விடுவோமோ என்றும் ஏன் கவலையே படவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடைசியாக நாடியாவா? அபிஷேக்கா? என இருந்த போதும் அவர் அது பற்றி பேசாமல் ராஜு ஜெயமோகனை ஏமாற்றும் முயற்சியில் ஏன் ஈடுபட்டார் என்கிற கேள்விகளும் கிளம்பி உள்ளன.

இந்த வாரம் நாம எலிமினேட் இல்லை என்பதை அபிஷேக் அறிந்து கொண்டு தான் அப்படி நடந்தாரா? என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு கேட்டு வருகின்றனர்.

கடைசி வரைக்கும்

கடைசி வரைக்கும்

கூட்டத்தில் காண போனவர் என சின்னப் பொண்ணுவை நாமினேட் செய்த அபிஷேக் ராஜா கடைசி வரைக்கும் சேவ் ஆகாமல் இருந்தது ரசிகர்களை ஏகப்பட்ட ட்ரோல் மீம்களை போடவும் கண்டு ரசிக்கவும் வழி வகை செய்தது. குறைவான வாக்குகளையும் அபிஷேக் தான் பெற்றார் என்றும் ட்விஸ்ட் கொடுக்கவே நாடியாவை விஜய் டிவி வெளியே அனுப்பியது என்றும் சிலர் கூறுகின்றனர்.

அதை பத்தி பேசல

அதை பத்தி பேசல

5 பேரில் வருண், சின்னப் பொண்ணு மற்றும் மதுமிதா சேவ் ஆன பிறகு நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இருக்கும் போது கூட அபிஷேக் ராஜா தான் வெளியே போய்விடுவோமா என்பது குறித்து யாரிடமும் பேசவில்லை. மற்ற போட்டியாளர்களும் அபிஷேக்கிடம் அது பற்றி பேசவில்லை. அவருக்கு எந்தவொரு ஆதரவும் தெரிவிக்கவில்லை.

ராஜுவை ஏமாற்றி

ராஜுவை ஏமாற்றி

சிறந்த போட்டியாளர் என்கிற விருதை ராஜு ஜெயமோகனுக்கு கொடுக்காமல் இமான் அண்ணாச்சிக்கு ஏன் கொடுத்தேன் என்கிற விவரத்தை அந்த நேரம் ராஜு ஜெயமோகனை மடக்கி பிடித்து அபிஷேக் சொல்ல காரணம் ஏன்? என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் அடுக்கி வருகின்றனர். ராஜுவின் நிழலில் தான் அடுத்த வாரத்தையும் ஓட்ட வேண்டும் என அபிஷேக் நினைத்ததால் தான் அவர் அப்படி பேசினார் என்றும் விளாசி வருகின்றனர்.

அபிஷேக்கிற்கு தெரியுமா

அபிஷேக்கிற்கு தெரியுமா

தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற மாட்டோம் என்பது ஏற்கனவே அபிஷேக் ராஜாவுக்கு தெரிந்திருப்பது போலவே அவரது செயல்கள் இருப்பதாகவும் நாடியா சங் எலிமினேட் ஆன பிறகும் அடுத்த வாரம் நாம் தான் என நினைக்காமல் அடுத்த வாரம் சின்ன பொண்ணுவை வெளியே அனுப்பிவிடுவார்கள் என தைரியமாக இருந்து பாவனியிடம் சண்டை போடுகிறார் என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் சந்தேக கேமராக்களை சுழற்றி வருகின்றனர்.

Recommended Video

IPL 2021: Thala Dhoni-யை பாராட்டிய Simbhu, Dhanush | Celebrity Celebration
கொடுமை தொடரும்

கொடுமை தொடரும்

நான் பரதநாட்டியம் ஆட போறேன், நான் விளையாடினால் எவனும் இருக்க முடியாது என வீர வசனம் பேசும் அபிஷேக் ராஜாவின் கொடுமைகளை இன்னும் எத்தனை வாரத்துக்கு பார்க்க வேண்டுமோ ஆண்டவரே என கமலிடமே ரசிகர்கள் கோரிக்கைகளை வைக்க தொடங்கி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X