twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வராமல்.. சிகப்பு நிற காரில் விஜய் வரக் காரணம் என்ன?

    |

    சென்னை: நீலாங்கரை வேல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் நடிகர் விஜய் சிகப்பு நிற காரில் வந்து இறங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

    Recommended Video

    #TNLocalBodyElection தடுக்கி விழுந்த புகைப்பட கலைஞர்... கை கொடுத்து உதவிய விஜய் - ரசிகர்கள் நெகிழ்ச்சி!

    கடந்த சட்டமன்ற தேர்தலில் சைக்கிளில் வந்து நடிகர் விஜய் வாக்களித்த வீடியோக்கள் புகைப்படங்கள் வேற லெவலில் டிரெண்டான நிலையில், இந்த முறையும் நடிகர் விஜய் வாக்களித்தது பெரும் பேசு பொருளாக மாறி உள்ளது.

    ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வந்து விஜய் வாக்களிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், செம சர்ப்ரைஸ் ஆக சாதாரண சிகப்பு காரில் நடிகர் விஜய் வந்து வாக்களித்தது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது.

    சைக்கிள் இல்லை

    சைக்கிள் இல்லை

    நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வாக்குச் சாவடி மையம் அருகே இருப்பதால், கடந்த முறை நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்குப் பதிவு செலுத்தினார் எனக் கூறப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படுத்தவே நடிகர் விஜய் சைக்கிளில் வந்தார் என்றும் கூறப்பட்டன. ஆனால், இந்த முறை சைக்கிளில் நடிகர் விஜய் வரவில்லை.

    சாதாரண காரில்

    சாதாரண காரில்

    நடிகர் விஜய் தனது பிரம்மாண்டமான சொகுசு காரான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காரில் வாக்குச்சாவடி மையத்துக்கு வந்து தனது வாக்கை செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த நிலையில், சாதாரண சிகப்பு நிற மாருதி காரில் வந்த விஜய் தனது வாக்கை செலுத்திவிட்டு சென்றார்.

    ரோல்ஸ் ராய்ஸ் கார்

    ரோல்ஸ் ராய்ஸ் கார்

    ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நடிகர் விஜய் உரிய நுழைவு வரி செலுத்தவில்லை என தனி நீதிபதி அவருக்கு எதிராக விதித்த அபராத தொகைக்கு எதிராக வழக்கு தொடர்ந்து வெற்றிப் பெற்ற நிலையில், அந்த காரிலேயே விஜய் வருவார் என ரசிகர்களும் பெரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், விஜய் ஏன் அந்த காரில் வரவில்லை என்கிற யூகங்களும் கிளம்பி வருகின்றன.

    கூட்டம் அதிகமாகிவிடும்

    கூட்டம் அதிகமாகிவிடும்

    பெரிய காரில் வந்தால் பார்க்கிங் பிரச்சனை ஏற்படும். மேலும், ரசிகர்கள் அடையாளம் கண்டு கொண்டு ஏகப்பட்ட அளவில் கூட்டமாகிவிடும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான் சாதாரண காரில் நடிகர் விஜய் வாக்குச்சாவடிக்கு வந்தார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும், அவர் சிவப்பு நிற காரில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து வந்ததும் அரசியலாக பார்க்கப்பட்டு வருகிறது.

    பீஸ்ட் ஆடியோ லாஞ்சில்

    பீஸ்ட் ஆடியோ லாஞ்சில்

    மேலும், அந்த பிரச்சனை தொடர்பாக பீஸ்ட் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். வரும் மார்ச் மாதம் பிரம்மாண்டமாக பீஸ்ட் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பீஸ்ட் ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக் குத்து பாடலே சர்வதேச அளவில் ஹிட் அடித்துள்ளது. மேலும், எத்தனை பாடல்கள் அந்த படத்தில் இடம்பெற போகிறது என்பதை அறிந்து கொள்ளவே ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

    English summary
    Why actor Vijay avoid Rolls Royce car for coming to voting booth and choose simple Red Maruthi car buzz circulates in social media.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X