விஜயகாந்துக்கு மட்டும் பத்மபூஷன் விருது வழங்காமல் இழுத்தடிப்பு.. இதுதான் காரணமா? வெளியான தகவல்கள்

சென்னை: நடிகரும் தேமுதிக தலைவர்களும் ஆன விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதத்தில் உடல்நிலை குறைபாட்டால் காலமான நிலையில் அந்த நேரத்தில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று டெல்லியில் நடந்த விழாவில் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று அவருக்கு விருது வழங்கப்படவில்லை.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் கூறுகையில் டெல்லியில் அடுத்த கட்டமாக நடைபெறும் விருது விழாவில் விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

Why Actor Vijayakanth Padma Bhushan Award was not given

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் விருதுகள் வழங்கும் விழா பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (ஏப்ரல் 22) அன்று நடைபெற்ற விழாவில் ஐந்து பேருக்கு பத்ம விபூஷன் விருதுகளும், 17 பேருக்கு பத்ம பூஷன் விருதுகளும், 110 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் முன்னாள் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கும் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. மேலும் பிரபல பாடகி உஷா உதூப் மற்றும் நடிகர் மீதும் சக்கரவர்த்தி ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

விருதுகளை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். ஆனால் கடந்த டிசம்பர் மாதத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்று அந்த நேரத்தில் மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு விருது வழங்கப்படவில்லை. இது குறித்து மத்திய அரசு தெரிவிக்கையில் அடுத்த அடுத்தகட்ட விழாக்களில் விஜயகாந்த்க்கு விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

ஆனால் இது குறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்கையில் விஜயகாந்த் இறந்ததும் அவருக்கு இருந்த அனுதாப அலையை சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்காக மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்துவிட்டு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா பாஜக அரசோடு கூட்டணி அமைக்காததால் இப்போது அவருக்கு விருது வழங்கப்படவில்லையா? என்று சில கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே மத்திய அரசு விஜயகாந்த்க்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டதும் அது குறித்து கருத்து தெரிவித்த பிரேமலதா, "இந்த விருது அறிவிக்கப்பட்டது சந்தோஷம்தான். ஆனால் இது விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது அவருக்கு கொடுத்திருந்தால் நான் இன்னும் சந்தோஷப்பட்டு இருப்பேன். இந்த விருது அறிவித்தது காலம் கடந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது" என்று அந்த நேரத்தில் கருத்து தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X