குடி பழக்கத்தால் சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ஷங்கர் பட நடிகை.. பரபரப்பை கிளப்பிய பயில்வான்!
சென்னை: குடி பழக்கத்தால்தான் பிரபல நடிகை சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட்டார் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.
தெலுங்கில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சதா. தொடர்ந்து தெலுங்கில் பிராணம், நாகா ஆகிய படஙஙகளில் நடித்தார்.
பின்னர் தெலுங்கு படமான ஜெயம் தமிழில் அதே பெயரில் ரிமேக் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார் சதா.

அந்நியன் படத்தில்
மாதவனுடன் எதிரி, பிரியசகி ஆகிய படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என அழைக்கப்படும் ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடித்தார் சதா.

டாப் ஹீரோயினாக
இவர் நடித்த படங்கள் அனைத்துமே ஹிட்டானதால் டாப் ஹீரோயினாக வலம் வந்தார் சதா. மேலும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து வந்தார் நடிகை சதா.

வடிவேலுவுக்கு ஜோடியாக
ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்புகள் இல்லாமல் போனதால் நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு ஜோடியாக எலி படத்தில் நடித்தார் சதா. மேலும் சில படங்களில் ஸ்பெஷல் அப்பீயரன்ஸ் கொடுத்தார நடிகை சதா.

ஓரங்கட்டப்பட்டது ஏன்?
கடைசியாக அவரது நடிப்பில் டார்ச் லைட் படம் வெளியானது. இந்தப் படத்தில் பாலியல் தொழில் செய்யும் பெண்ணாக நடித்தார் சதா. சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகை சதா திடீரென ஓரங்கப்பட்டது குறித்து பிரபல நடிகரும் விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

வெளிவரும் ரகசியங்கள்
பயில்வான் ரங்கநாதன் சினிமாவில் நடிகராகவும் பத்திரிக்கை துறையில் சினிமா தொடர்பான விமர்சனங்களை எழுதும் விமர்சகராகவும் உள்ளார். அவ்வப்போது ஊடங்களுக்கு பேட்டியளித்து வரும் பயில்வான் ரங்கநாதன் சினிமா நட்சத்திரங்கள் தொடர்பான ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

எப்போதும் குடி சிகரெட்
அந்த வகையில் நடிகை சதா குறித்து கூறியுள்ள பயில்வான் ரங்கநாதன், சதா சினிமாவில் இருந்து ஓரங்கட்டப்பட காரணம், அவரது போதை பழக்கம் தான் என தெரிவித்துள்ளார். நடிகை சதா சர்வகாலமும் குடி சிகரெட் என்று இருந்ததாலேயே ஓரங்கட்டப்பட்டார் என்றும் கூறியுள்ளார்.

நானே பார்த்திருக்கிறேன்
மேலும் சதா ஷூட்டிங் ஸ்பாட்டில் புகைப்பிடிப்பதை தானே பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எப்போதும் போதை பழக்கத்துடன் இருந்ததால் தான் சினிமாவில் இருந்து அவர் ஓடி விட்டதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். பயில்வான் ரங்கநாதன் நடிகை சதா குறித்து கூறியுள்ள இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











