Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பழைய சாதத்தை பரிமாறும் பிக் பாஸ்.. மீண்டும் மீண்டும் பயண வீடியோவா.. அட போங்க பாஸ் முடியல!
சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 சிறப்பாக இருப்பதாக அதன் போட்டியாளர்கள் மட்டுமே சொல்லிக் கொண்டு வருகின்றனர்.
ஆனால், அரைத்த மாவையும் பழைய சாதத்தையும் மட்டுமே ரசிகர்களுக்கு தொடர்ந்து பரிமாறி வருவதை நிறுத்துவதாக தெரியவில்லை.
சனிக்கிழமை எபிசோடில் கமல் வராத நிலையில், போட்டியாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் போட்டுக் காண்பிக்கப்பட்ட அதே பழைய பயண வீடியோவே கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியிலும் காண்பிக்கப்பட்டது ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.
தீப்பொறி
பறக்க
ஆரம்பமானது…
பிக்
பாஸ்
சீசன்
5
கிராண்ட்
ஃபினாலே!

ஆரம்பமானது கிராண்ட் ஃபினாலே
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி வண்ண விளக்குகள் மிளிர பிரம்மாண்ட அரங்கில் ஆரம்பமாகி உள்ளது. ஆனால், அதே பழைய வார இறுதி நிகழ்ச்சி போலவே இருப்பதாகவும் புதிதாக எந்தவொரு ஏற்பாடும் இல்லாத அளவுக்கு இந்த சீசன் கிராண்ட் ஃபினாலே களையிழந்து காணப்படுவதாக ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

பழைய சோறு
சனிக்கிழமை எபிசோடிலேயே ஃபைனலிஸ்ட்டுகளுக்கு காட்டப்பட்ட அதே பயண வீடியோவையே தற்போது மாஷ் அப் செய்து வெளியிட்டு ரசிகர்களின் பொறுமையை மேலும், சோதித்துள்ளனர். புதிதாக காட்சிகள் கூட இல்லையா காட்டுவதற்கு என்றும் கிராண்ட் ஃபினாலேவில் சில புதுமையான நிகழ்ச்சியாவது வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமே இல்லை
கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் சினிமா நடிகர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவிக்ட் ஆன போட்டியாளர்களே நடனமாடி போரடித்தது சுவாரஸ்யத்தை மிகவும் குறைத்துள்ளது என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மாற்றம் வரணும்
அடுத்த சீசனிலாவது பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே லைவ்வாக நடக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும், தெலுங்கு பிக் பாஸ் அளவுக்கு ஏகப்பட்ட சினிமா பிரபலங்களின் கலை விழா நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி ரசிகர்களை பார்க்க தூண்டும் அளவுக்கு இருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா காரணமாக
கடந்த சீசன் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், இந்த சீசன் போட்டியாளர்களான இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளாததும் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாகவே தமிழ் பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி கடமைக்கு நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.