ஏன் இப்படி? ஒப்பந்தமான படத்தில் இருந்து நடிகை திடீர் நீக்கம்.. ஐஸ்வர்யா ராஜேஷூக்கு அடித்தது லக்!

By

சென்னை: ஒப்பந்தமான படத்தில் இருந்து பிரபல நடிகை திடீரென நீக்கப்பட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கில் கவனம் செலுத்தி வருகிறார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

அவர் நடித்து சமீபத்தில் ஓடிடியில் வெளியான க/பெ ரணசிங்கம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்புக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைத்தன. இதையடுத்து அவர் நடித்துள்ள பூமிகா என்ற படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், திட்டம் இரண்டு என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

நானி ஜோடியாக

நானி ஜோடியாக

தமிழில் கவனம் செலுத்தும் அவர், தெலுங்கில் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என்ற படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக, கிராமத்துப் பெண்ணாக நடித்து இருந்தார். அதற்கு முன், மிஸ் மேட்ச் உள்பட சில தெலுங்கு படங்களில் நடித்தார். இப்போது நானி ஜோடியாக டக் ஜகதீஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தேவா கட்டா இயக்கம்

தேவா கட்டா இயக்கம்

இதையடுத்து, மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சாய் தரம் தேஜ் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தை தேவா கட்டா இயக்குகிறார். பொலிட்டிகல் த்ரில்லர் படமான இதன் ஷூட்டிங் ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷும் கலந்து கொண்டிருக்கிறார்.

ரிபப்ளிக் டைட்டில்

ரிபப்ளிக் டைட்டில்

இந்தப் படத்தில் முதலில் கமிட் ஆனவர் நிவேதா பெத்துராஜ். அவரை நீக்கிவிட்டு ஐஸ்வர்யா ராஜேஷை ஒப்பந்தம் செய்துள்ளனர். தயாரிப்பாளர்கள் முதலில் கேட்கும்போது ஐஸ்வர்யா ராஜேஷின் கால்ஷீட் கிடைக்கவில்லை என்றும் பிறகு கிடைத்ததால், நிவேதா மாற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு ரிபப்ளிக் என்ற டைட்டில் வைக்கப்படலாம் என்று தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X