அனிகா முக்கியம்.. அவர்தான் வேண்டும்.. கேட்டு வாங்கிய அஜித்.. பின்னணியில் அசத்தல் சென்டிமென்ட்!

நடிகை அனிகாவை நடிகர் அஜித் தனது படங்களில் எல்லாம் தொடர்ந்து நடிக்க வைப்பதற்கு நிறைய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

Recommended Video

Anikha joins Thala 60

சென்னை: நடிகை அனிகாவை நடிகர் அஜித் தனது படங்களில் எல்லாம் தொடர்ந்து நடிக்க வைப்பதற்கு நிறைய காரணம் இருப்பதாக கூறப்படுகிறது.

மலையாளத்திலும் தமிழிலும் நிறைய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் அனிகா. முக்கியமாக மலையாளத்தில் இவர் நடித்த பாஸ்கர் தி ராஸ்கல் மற்றும் 5 சுந்தரிகள் ஆகிய படங்கள் பெரிய வரவேற்பை பெற்றது.

தமிழில் இவர் எல்லோருக்கும் தெரிந்தது என்னை அறிந்தால் படத்தில் இருந்துதான். அந்த படத்தில் இவர் அஜித்திற்கு மகளாக நடித்து இருந்தார்.

ஹிட்

ஹிட்

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படம் பெரிய அளவில் அஜித்திற்கு ஹிட் கொடுத்தது. அதேபோல் அனிகாவிற்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

சூப்பர் நடிப்பு

சூப்பர் நடிப்பு

அதுமட்டுமில்லாமல் இவரின் நடிப்பு எல்லோரையும் கவர்ந்து இருந்தது. அம்மாவை இழந்துவிட்டு, அஜித்துடன் இவர் கொடுத்த குட்டி குட்டி ரியாக்சன்கள் எல்லாம் பக்கா மாஸ். அதிலும் உனக்கென்ன வேணும் சொல்லு அஜித் - அனிகா இடையே பெரிய அப்பா - மகள் கெமிஸ்ட்ரி பாடலாக அமைந்தது.

அடுத்த படம்

அடுத்த படம்

அதன்பின் சிவா இயக்கத்தில் அப்பா மகள் பாசத்தை மையப்படுத்தி விசுவாசம் படம் வெளியானது. இந்த படத்திலும் அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து இருந்தார். அதிலும் அஜித் அனிகாவை பார்த்து என் ஜாமி என்று சொல்லும் வசனம் எல்லாம் தியேட்டரில் பெரிய அப்ளாஸ் அள்ளியது.

இப்போது மீண்டும்

இப்போது மீண்டும்

இந்த நிலையில் தற்போது அஜித் மீண்டும் அனிகாவுடன் நடிக்க உள்ளார். அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கும் அடுத்த படத்தில் அனிகா நடிக்க உள்ளார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதிலும் அவர் அஜித்திற்கு மகளாக நடிக்க உள்ளார்.

என்ன காரணம்

என்ன காரணம்

அஜித் தொடர்ந்து அனிகாவை தனது படங்களில் நடிக்க வைப்பதற்கு நிறைய காரணம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அனிகாவை அஜித் தனது குடும்பமாக பார்க்கிறார் என்று கூறப்படுகிறது. அனிகா மற்றும் அஜித் மகள் அனோஷ்கா இருவரும் நெருங்கிய நண்பர்களாம்

ஒரே குடும்பம்

ஒரே குடும்பம்

அதேபோல் அனிகா அடிக்கடி அஜித் வீட்டிற்கு செல்வார். ஷாலினிக்கு அனிகா செல்லப்பிள்ளையாம். இதனால் படத்திலும் அஜித் அனிகா, அப்பா மகளாக நடித்தால் நன்றாக வொர்க் அவுட் ஆகிறது என்று கூறுகிறார்கள். அதேபோல் தனது படங்களின் வெற்றிக்கும் அனிகா சென்டிமெண்டாக ஒரு காரணம் என்று அஜித் கருதுகிறார்.

எப்படி காரணம்

எப்படி காரணம்

ஆம், என்னை அறிந்தால் படம் அஜித்திற்கு பெரிய அளவில் சிட்டி ரசிகர்களை அளித்தது. அதிலும் தான் இழந்த பெண் ரசிகர்களை அவர் என்னை அறிந்தால் படத்தின் உனக்கென்ன வேணும் சொல்லு பாடல் மூலம் மீண்டும் மீட்டெடுத்தார். விசுவாசம் படமும் அவருக்கு குடும்ப ரசிகர்களை நிறைய திருப்பிக்கொடுத்தது.

இவர்தான்

இவர்தான்

இதற்கு எல்லாம் அனிகாவும் ஒரு காரணம். அவரின் ராசி மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால் அவரே நடிக்கட்டும் என்று அஜித் தனது படங்களில் எல்லாம் அனிகாவை ஒப்பந்தம் செய்து வருகிறார் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X