ரெட்ட தல முடிஞ்சி போச்சாமே?

By Mayura Akilan

சென்னை: ரெட்டை தல என்று டைட்டில் வரைக்கும் முன்னேறிய அஜீத்-முருகதாஸ் கூட்டணி அவ்வளவு சீக்கிரம் டமால் ஆனதற்கு என்ன காரணம்? என்பதுதான் இப்போதைக்கு கோலிவுட்டில் பேச்சாக உள்ளது.

தீனாவில் தொடங்கிய பாசம் இப்போது ரெட்டை தல வரைக்கும் நீடித்தது திடீர் என்று இப்போதைக்கு அஜீத் படமில்லை. இந்தி படம் பண்ணிட்டு... அப்புறம் கமல் சார் படம் பண்ணிட்டு...' அப்புறம்தான் அஜீத் படம் என்கிறார் முருகதாஸ்.

அஜீத்-முருகதாஸ் இணையும் படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க துடித்துக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் நானே தயாரிக்கிறேன் என்று முன் வந்தது ஏ.ஜி.எஸ் நிறுவனம். இருவருமே இந்த மூன்றெழுத்து நிறுவனம் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர்கள்.

சம்பளத்தை பற்றி பேச்சு வார்த்தை ஆரம்பித்த பிறகுதான் சிக்கல் ஆரம்பமானதாம். அப்புறம் என்ன டமால் ஆகிவிட்டது ரெட்ட தல என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

தீனா வெற்றிக் கூட்டணி

தீனா வெற்றிக் கூட்டணி

அஜீத் - முருகதாஸ் கூட்டணியின் சூப்பர் ஹிட்டான படம் ‘தீனா'வில்தான் அஜீத்திற்கு ‘தல' பட்டம் கிடைத்தது. அஜீத்திற்கும், முருகதாஸுக்கும் ஒரு டர்னிங் பாயின்டாக அமைந்த படங்களில் அது ஒன்று.

இரட்டை வேடத்தில் அஜீத்

இரட்டை வேடத்தில் அஜீத்

இந்த புதிய படத்தில் அஜீத்துக்கு இரட்டை வேடம் என்பதால் ‘ரெட்டை தல' என்று பெயர்வைக்கப்பட்டது.

டபுள்னாலே ஹிட்தான்

டபுள்னாலே ஹிட்தான்

அஜீத்துக்கு ஏற்கெனவே வந்த இரட்டை வேட படங்கள் அனைத்துமே பெரிய அளவில் ஹிட். வாலி, வில்லன், வரலாறு என்ற அந்த லிஸ்டில், இது அடுத்த டபுள் ஆக்டிங் படம். முதல் ‘தல' பட்டம் கொடுத்தவரின், இரண்டாவது படம், ‘ரெட்டை தல' என்று... எல்லாமே நன்றாகத்தான் போனது.

சம்பளத்தில் விவகாரம்

சம்பளத்தில் விவகாரம்

சம்பளத்தை பற்றி பேச்சு வார்த்தை ஆரம்பித்த பிறகுதான், சிக்கல் ஏற்பட்டது என்கிறார்கள். சுமார் 23 கோடியை சம்பளமாக கேட்டாராம் அஜீத். எனக்கு 15 என்று அநியாயத்துக்கு ஆசைப்பட்டாராம் முருகதாஸ்.

கம்பெனிக்குக் கட்டுப்படியாகாது

கம்பெனிக்குக் கட்டுப்படியாகாது

23-ம், 15-ம் கொடுத்து தயாரித்து, மார்க்கெட்டிங் செய்ய முடியாது என்பது, ஏ.ஜி.எஸ் நிறுவனம் வைத்திருக்கும் கணக்கு. அவர்கள் ட்ராப் பண்ணிய ப்ராஜெக்ட்டை, கோடம்பாக்கத்தில் யாரும் மரியாதை நிமித்தம் தொடமாட்டார்கள் என்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X