twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வரலாறு படத்தில் அஜித்துக்கு அந்தப் பெயரை வைக்க அவர்தான் காரணம்.. மனம் திறந்த கேஎஸ் ரவிக்குமார்!

    |

    சென்னை: வரலாறு படத்தில் நடிகர் அஜித்தின் பெயருக்கு பின்னால் உள்ள காரணத்தை பிரபல இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார் மனம் திறந்து பேசியுள்ளார்.

    2006ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் வரலாறு. இந்தப் படத்தில் அஜித் சிவசங்கர், விஷ்ணு மற்றும் ஜீவா என மூன்று வேடங்களில் நடித்தார்.

     வந்துடுச்சு... புஷ்பா ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியானது! வந்துடுச்சு... புஷ்பா ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியானது!

    இந்தப் படத்தில் அசின், மனோரமா, விவேக் என பலர் நடித்திருந்தனர். இதில் அப்பா அஜித் கதாப்பாத்திரத்தின் பெயர் சிவசங்கர்.

    அஜித்துக்கு ஏன் அந்தப் பெயர்?

    அஜித்துக்கு ஏன் அந்தப் பெயர்?

    இந்நிலையில் இப்படத்தின் இயக்குநரான கேஎஸ் ரவிக்குமார், வரலாறு படத்தில் அஜித்தின் கதாப்பாத்திரத்திற்கு சிவ சங்கர் என பெயர் வைத்தது ஏன் என உருக்கமாக கூறியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் மரணமடைந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கருக்காகவே அஜித்தின் கதாப்பாத்திரத்திற்கு அந்த பெயரை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

    சிவசங்கர் மாஸ்டரை முன்பே தெரியும்

    சிவசங்கர் மாஸ்டரை முன்பே தெரியும்

    அவர் பேசியிருப்பதாவது, வரலாறு படத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவதற்கு முன்பே சிவசங்கர் மாஸ்டரை எனக்கு தெரியும். படத்தைத் தொடங்கும்போது, அவரது கதாபாத்திரம் தவறாகப் புரிந்து கொள்ளப்படுமா என்று அஜித் சற்றுத் தயங்கினார். அவரிடம் சிவசங்கர் மாஸ்டரைப் பற்றி சொல்லி அவரை படத்தில் நடிக்க ஊக்கப்படுத்தினேன்.

    பெண்மை இருக்கும்

    பெண்மை இருக்கும்

    படத்தில் உங்கள் கதாபாத்திரம் போல் சிவசங்கர் மாஸ்டருக்கும் நிஜ வாழ்க்கையிலும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன். சிவசங்கர் மாஸ்டரின் உடல்மொழியில் சற்று பெண்மை வெளிப்படும். அதற்குக் காரணம், அவர் தனது கலைவடிவத்தை தன் உடலில் உள்வாங்கிக் கொண்டார். அவர் வணக்கம் சொல்வதில் இருந்து வெற்றிலை போடுவது , திட்டுவது என எல்லாவற்றிலும் பெண்மை டச் இருக்கும்.

    அவர் மீதுள்ள அன்புதான்

    அவர் மீதுள்ள அன்புதான்

    அதை யாரும் தவறாகக் கண்டுகொள்வதில்லை. சிவசங்கர் மாஸ்டர் மீது எனக்குள்ள அன்புதான் அவருடைய பெயரை அஜித்தின் கேரக்டருக்கு பயன்படுத்த வைத்தது. அவர் அஜித்திற்கு நடனம் கற்றுக் கொடுத்தபோது, ஒத்திகைக்குப் பதிலாக, சில நாட்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவரை ஃபாலோ செய்யுமாறு கூறினேன்.

    அஜித்துக்கும் காட்டினேன்

    அஜித்துக்கும் காட்டினேன்

    அதனால் அஜித்தின் பழக்கவழக்கங்களைக் காட்டவும், எனக்கு என்ன வேண்டும் என்று அவருக்குத் தெரியப்படுத்தவும் உதவியாக இருந்தது. அஜித்துக்கு மாஸ்டர் எப்படி நடந்து கொள்கிறார், எப்படி ஸ்டைலாக வெத்தலைத் காம்பை கிள்ளி எறிந்துவிட்டு சுண்ணாம்பு தடவுகிறார், போனில் எப்படி பேசுகிறார் என்பதையெல்லாம் காட்டினேன்.

    ஜவ்வாது பயன்படுத்துவார்

    ஜவ்வாது பயன்படுத்துவார்

    அஜித் யாரையாவது அடிக்கும்போது மாஸ்டரை டான்ஸ் போஸ் கொடுக்க கூறிய ஒரு சண்டைக் காட்சியும் இருந்தது. இது பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இன்னிசை அளபடயே பாடலில் தனது இரு மகன்களையும் நடனமாட வைத்தார்.

    சிவசங்கர் மாஸ்டர் ஜவ்வாது பயன்படுத்துவார், அதனால் அவர் என் அலுவலகத்திற்கு வரும் ஒவ்வொரு முறையும் அந்த இடம் முழுவதும் அந்த வாசனை இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை காலமானார்

    ஞாயிற்றுக்கிழமை காலமானார்

    அவரது இழப்பை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்... இவ்வாறு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உருக்கமாக கூறியுள்ளார். தேசிய விருது உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ள டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். ஹைத்ராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி காலமானார்.

    English summary
    Why Ajith name is Sivashankar in Varalaru? Director KS Ravikumar opens up. Director KS Ravikumar impressed with Dance Master Sivashankar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X