'இதனால் தான் அஜித்துக்கு விருது வழங்கப்படுவதில்லையா?'.. சந்தேகம் எழுப்பும் பிரபல இயக்குனர்!
பொது விழாக்களுக்கு வராமல் இருப்பதால் தான் அஜீத்துக்கு விருது தரப்படுவதில்லையா என இயக்குனர் விஜய் ஸ்ரீ சந்தேகம் எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகர் அஜித்துக்கு ஏன் விருது வழங்கப்படவில்லை என இயக்குனர் விஜய் ஸ்ரீ கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பட்டியலில் தமிழ் படங்கள் புறக்கணிப்பு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 96, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களுக்கு விருது தராதது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு வெளியான தாதா 87 படமும் தேசிய விருது தேர்வு கமிட்டியின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதல் சுற்றிலேயே படம் நிராகரிக்கப்பட்டது.
இந்த சூழலில் இப்படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் "நடிகர் அஜித்குமார் போன்ற ஒரு சிலருக்கு விருதுகள் வழங்கும்வது சமீபத்தில் நான் கேள்வி படவில்லை. அவர்கள் பொதுவிழாக்களுக்கு வருவதில்லை என்பதால் இருக்குமோ ? விருதுகள் விற்பதை தடுக்கவேண்டும் கூட்டம் கூட்டி பணத்துக்காக நடத்துவது தொடர்கிறது.." என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவருடைய இந்த கேள்வி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











