நேருக்கு நேர் படத்தில் விஜய்யுடன் அஜித் இணைந்து நடிக்க மறுத்த காரணம் இதுதானா?.. தாமு சொன்ன தகவல்

சென்னை: தமிழ் சினிமாவில் இப்பொழுது இரு துருவங்களாக உச்ச நிலையில் இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய்

அஜித் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியேறும் போதும் வசூலில் மாறி மாறி சாதனை செய்து வருகின்றனர்

ராஜாவின் பார்வையிலே படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க இருந்த நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்காததற்கான காரணம் குறித்து நடிகர் தாமு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

போட்டி போட்டு வசூல்

போட்டி போட்டு வசூல்

தமிழ் சினிமாவில் இப்போது உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு உள்ளவர்கள் விஜய் மற்றும் அஜித். ஒரே சமயத்தில் திரையுலகில் அறிமுகமாகி இப்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் டஃப் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து உள்ளனர். அஜித் மற்றும் விஜய் என இருவருமே சரிசமமான ரசிகர்கள் கொண்டு இருக்கின்றனர் அஜித் மற்றும் விஜய் திரைப்படங்கள் ஒவ்வொரு முறை வெளியாகும்போதும் வசூலில் நீயா நானா என மோதிக்கொண்டு மாறிமாறி வசூல் செய்து வருகிறது

அஜித் நண்பர் கதாபாத்திரத்தில்

அஜித் நண்பர் கதாபாத்திரத்தில்

திரையுலக போட்டியாளர்களாக பார்க்கப்படும் விஜய் மற்றும் அஜித் ஆரம்ப கால கட்டங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். அந்தவகையில் 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே என்ற படத்தில் அஜித் விஜய் இணைந்து நடித்திருப்பார்கள். இயக்குனர் ஜானகி சௌந்தர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் ஹீரோவாகவும் அஜித் நண்பர் கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.

நேருக்கு நேர்

நேருக்கு நேர்

அதன் பிறகு மீண்டும் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடிக்க இருந்த திரைப்படம் நேருக்கு நேர் இயக்குநர் வசந்த் இயக்கத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. விஜய் மற்றும் சூர்யா இணைந்து கலக்கிய இந்த படத்தில் முதலில் சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அஜித் தான் ஆனால் பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை அஜித்திற்கு பதிலாக சூர்யா மாற்றப்பட்டு படமும் வெளியாகி வெற்றி பெற்றது.

பாதியில் விலகினார்

பாதியில் விலகினார்

இந்த நிலையில் ஏன் அஜித் நேருக்கு நேர் படத்தில் இருந்து விலகினார் என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்த சூழலில் பிரபல காமெடி நடிகர் தாமு நேருக்கு நேர் படத்தில் அஜித் நடிக்காமல் போனதற்கான காரணம் குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் பேட்டியில் பேசியுள்ளார். நேருக்கு நேர் படத்தில் ஃபர்ஸ்ட் ஷெட்யூல் அஜித் வைத்துதான் எடுக்கப்பட்டது ஆனால் அதன் பிறகு அஜித் அந்தப் படத்தில் இருந்து விலகிவிட்டார் அதற்கு காரணம் டேட்டா,ரேட்டா என்று தெரியவில்லை உண்மையான காரணம் தெரியாமல் நாம் எதுவும் பேச முடியாது அஜித் விலகிய பிறகு சரவணன் என்கிற சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தார் இவ்வாறு அந்தப் பேட்டியில் நடிகர் தாமு பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X