என்ன நடந்தது? அவசர அவசரமாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட பிகில் படக்குழு.. பின்னணி இதுதான்!

நடிகை நயன்தாரா இருக்கும் போஸ்டரை பிகில் படக்குழு திடீர் என்று வெளியிட்டதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

Recommended Video

Bigil Songs | Unakaga Single | Bigil Audio Launch | Vijay| Nayanthara | Atlee

சென்னை: நடிகை நயன்தாரா இருக்கும் போஸ்டரை பிகில் படக்குழு திடீர் என்று வெளியிட்டதற்கு பின் முக்கிய காரணம் இருப்பதாக பேசிக்கொள்கிறார்கள்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் பிகில் படம் அடுத்த மாதம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

கால்பந்து போட்டியை மையமாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தின் இரண்டாவது பாடலான ''உனக்காக'' இன்று மாலை வெளியாகிறது.

படம்

படம்

இந்த நிலையில் இந்த படம் தொடர்பாக நேற்றுவரை நான்கு போஸ்டர்கள் வெளியானது. முதல் போஸ்டரில் இரண்டு விஜய் இருக்கும் புகைப்படம் இருந்தது. அது பெரிய வரவேற்பை பெற்றது. வயதான விஜய், இளம் விஜய் கெட்டப்கள் அதில் இருந்தது.

எப்படி இருக்கும்

எப்படி இருக்கும்

அதன்பின் கால்பந்து வீராங்கனை ரோலில் நடித்துள்ள இந்துஜா உள்ளிட்ட நடிகைகளுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதேபோல் படத்தில் உள்ள மற்ற ஆண் நடிகர்கள், துணை நடிகர்கள் உடன் விஜய் இருக்கும் இன்னொரு புகைப்படம் வெளியானது.

மூன்று

மூன்று

அதன்பின் மீண்டும் கால்பந்து வலைக்கு பின் இந்துஜா உள்ளிட்ட நடிகைகளுடன் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியானது. ஆனால் படக்குழு நயன்தாரா போஸ்டரை மட்டும் வெளியிடாமல் இருந்தது. இது தொடர்பாக பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ரகசியம்

ரகசியம்

நயன்தாரா கெட்டப்பை படத்தில் ரகசியமாக வைத்திருக்க வேண்டும். அவரை நேரடியாக ரசிகர்கள் படத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பிகில் டீம் திட்டமிட்டு இருந்தது. இதனால் அவரின் போஸ்டரை பிகில் டீம் வெளியிடவில்லை.

சண்டை

சண்டை

ஆனால் நயன்தாரா ரசிகர்கள் இதனால் கோபம் அடைந்தனர். அதேபோல் நயன்தாராவும் தனக்கு சரியான மரியாதை இல்லாதது போல கருதியதாக செய்திகள் வந்தது. முக்கியமாக நயன்தாரா நாளை நடக்கும் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதும் சந்தேகம்தான் என்று கூறினார்கள்.

ஷாக்

ஷாக்

இது படக்குழுவிற்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. படம் வெளியாகும் நேரத்தில் பிரச்சனை வரும் நிலை இதனால் உருவானது. அட்லி மற்றும் நயன்தாரா இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில் சமாதானம்

பிகில் சமாதானம்

இதனால் தற்போது நயன்தாராவை சமாதான படுத்தும் வகையில் பிகில் படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது என்கிறார்கள். அதேபோல் அவரின் ''உனக்காக'' என்ற டூயட் பாடல் ஒன்றை இன்று மாலையே வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X