நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்காமல் போனதற்கு காரணம் இதுதான்.. விக்னேஷ் சிவன்

சென்னை : ட்ரெண்டிங்கான காதல் கதைகளை இப்போதுள்ள தலை முறைக்கு ஏற்றவாறு இயக்கி வெற்றிகளை கொடுத்து வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்

காத்துவாக்குல ரெண்டு காதல் மிகப் பிரமாதமான வரவேற்பை பெற்ற சூழலில் அடுத்ததாக அஜித் 62 படத்தை இயக்க தயாராகி வருகிறார்

இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய விக்னேஷ் சிவன் நானும் ரவுடிதான் படத்தில் அனிருத் ஹீரோவாக நடிக்காமல் போனதற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

போராடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன்

போராடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன்

காதல் படங்களை இப்போது உள்ள தலைமுறைக்கு ஏற்றவாறு இயக்கி புகழ் பெற்ற இயக்குனராக தமிழ் சினிமாவில் இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். போடா போடி மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவனுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. போடாபோடி வெளியாகி இயக்குனராக பெயர் எடுத்த பிறகும் அடுத்த படத்தை இயக்க போராடிக்கொண்டிருந்த விக்னேஷ் சிவன். இயக்குனராக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த எழுத்தாளராகவும் உள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கும் திரைப்படங்களில் பெரும்பான்மையான பாடல்களை அவரே எழுதி வருகிறார்.

ஹீரோவாக அனிருத்

ஹீரோவாக அனிருத்

இந்த நிலையில் போடா போடியை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கிய திரைப்படம் நானும் ரவுடி தான். மிகவும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி வெற்றிபெற்ற இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அப்போது மிகவும் பிஸியாக இசையமைப்பாளராக இருந்த அனிருத் விக்னேஷ் சிவன் மீது இருந்த நட்பின் காரணமாக அந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

டைவர்ஷன் ஆக வேண்டாம்

டைவர்ஷன் ஆக வேண்டாம்

ஆனால் இந்த விஷயத்தை அனிருத்தின் குடும்பத்தாரிடம் விக்னேஷ் சிவன் கூறிய போது அதற்கு அவர்கள் இப்போது அனிருத் நன்றாக இசை அமைத்து வருகிறார் இந்த சமயத்தில் ஹீரோவாக நடித்த டைவர்ஷன் ஆக வேண்டாம் அது அவரது திரைவாழ்க்கைக்கு நன்றாக இருக்காது எனவே இப்போதைக்கு அனிருத் ஹீரோவாக நடிக்க வேண்டாம் என கூறியதால் அனிருத் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

உதவியா இதைச் செஞ்சு கொடுங்க

உதவியா இதைச் செஞ்சு கொடுங்க

அதன் பிறகு பல நடிகர்களிடம் இந்தக் கதையைக் கூறி வந்த விக்னேஷ் சிவன் இறுதியாக மீண்டும் விஜய் சேதுபதியிடமே சென்றுள்ளார். அப்பொழுது விஜய் சேதுபதிக்கு அந்த கதையின் மீது நம்பிக்கை இல்லை அதற்கு வினேஷ் சிவன் எனக்காக இந்த படத்தை பண்ணி குடுங்க சார் எனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்த மாதிரி இருக்கும் போடா போடிக்கு பிறகு ரொம்ப நாளா இந்த கதையை வெச்சிகிட்டு சுத்திகிட்டு இருக்கேன். யாருமே நடிக்க முன் வர மாட்ராங்க நீங்க பார்த்து ஒரு உதவியா இதைச் செஞ்சு கொடுங்க என விஜய் சேதுபதியிடம் கேட்டதை தொடர்ந்து அவரும் நட்புக்காக நானும் ரவுடி தான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம். அதன்பிறகு கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு நானும் ரவுடி தான் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியும் பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X