ஓவியாவை ஏன் பிடிக்கும்? - ஆரவ் சொன்ன காரணம் இதுதான்!

By Vignesh Selvaraj

Recommended Video

ஓவியாவை பிடிக்க ஆரவ் சொன்ன காரணம் இதுதான்!- வீடியோ

சென்னை : விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். அதற்கு முன்பே சினிமாவில் நடித்திருந்தாலும் பிக்பாஸுக்கு பிறகு ரொம்பவே பிரபலம்.

இந்த நிகழ்ச்சியில் தான் ஓவியாவுக்கும், ஆரவ்வுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், ஆரவ் அதை மறுத்தார். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறினார் ஓவியா.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தபிறகு, ஆரவ்வும், ஓவியாவும் சகஜமாக பேசி வருகிறார்கள். இந்நிலையில், ஓவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தைக் கூறியிருக்கிறார் ஆரவ்.

காதல்

காதல்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகக் கலந்துகொண்ட ஓவியாவுக்கும், ஆரவ்வுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால், ஆரவ் அதை மறுத்தார். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு நிகழ்ச்சியில் இருந்தே வெளியேறினார் ஓவியா.

ஆரவ்

ஆரவ்

ஆரவ், நிகழ்ச்சி முழுவதும் கலந்துகொண்டு டைட்டிலையும் வென்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சினிமாவில் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஓவியாவும் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

நிலைமை சீரானது

நிலைமை சீரானது

ஆனால், பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஓவியா மிகவும் மனமுடைந்தார். ஆரவ்வை காதலிப்பதாக மறைமுகமாகக் கூறினார். தற்போது தான் அந்த விஷயம் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகிறது.

ஓவியாவை ஏன் பிடிக்கும்

ஓவியாவை ஏன் பிடிக்கும்

இந்நிலையில், தனக்கு ஏன் ஓவியாவைப் பிடிக்கும் என்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார் ஆரவ். "நாம் நாமாக இருப்பதுதான் இந்த உலகத்திலேயே மிகக் கஷ்டமான விஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பாலான இடங்களில் நாம் நடித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஓவியா ஆர்மி அளவுக்கு

ஓவியா ஆர்மி அளவுக்கு

"ஆனால், அப்படி இல்லாமல் ஓவியா எல்லா இடத்திலும் அவராகவே இருக்கிறார். அதனால்தான் அவரை நான் உட்பட எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. ரசிகர்கள் ஆர்மி உருவாக்கும் அளவுக்குப் புகழ் பெற்றதற்கும் இதுதான் காரணம்" என்று கூறியுள்ளார் ஆரவ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X