சினிமாவில் கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா
Recommended Video
சென்னை: என்னுடைய வேலை நான் சினிமாவில் எனது 100% முயற்சியை, உழைப்பை தர வேண்டும் என்பதே. அதை என் மனதளவில் நான் சிறப்பாக செய்து வருகிறேன். வெற்றியை நான் ஒரு போதும் என் தலையில் ஏற்றி கொண்டது இல்லை என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். ஆங்கில இதழுக்கு நயன்தாரா அளித்த பேட்டியில், சினிமாவில் ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகாரமும் ஏன் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இனிமேலாவது நடிகைகள் தங்களுக்கு எது தேவை என்பதை தைரியமாக கேட்க முன் வரவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார்.
தமிழ் சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா. பல கடுமையான கட்டங்களை தாண்டி இன்று இந்த அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார்.
குழந்தைகள், இளைஞர்கள், வயதானவர்கள் என பாகுபாடின்றி அனைவரின் பிரியமான ஹீரோயினாக நயன்தாரா இருப்பதற்கு அவரின் சிறப்பான யதார்த்தமான நடிப்பு, பலதரப்பட்ட கதாபாத்திரங்கள், சிம்ப்ளிஸிட்டி, கூல் என பல காரணங்கள் இருக்கிறது. இவர், அவர் என்றில்லாமல் கிட்டத்தட்ட அனைத்து ஹீரோக்களுடனும் கைகோர்த்து நடித்து விட்டார் நயன்தாரா.

நயன்தாரா
சமீப காலமாக பேட்டி அளிப்பதை தவிர்த்து வந்த நயன் தற்போது ஒரு வட இந்திய ஆங்கில இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் சினிமா சார்ந்த அனைத்து முடிவுகளையும் தானே எடுப்பதாகவும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாக தற்போது தேர்ந்தேடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

கவர்ச்சி நடிப்பு
மற்ற நடிகர்களோடு நடிக்கும் போது மட்டும் கவர்ச்சியை கையாளுவது ஏன் என்று நயன்தாராவிடம் கேட்டதற்கு, அது அந்த சூழ்நிலையைப் பொறுத்தது. சில தவிர்க்க முடியாத மறுக்க முடியாத சந்தர்ப்பங்களில் அப்படி நடிக்க வேண்டிய இக்கட்டான நிலை ஏற்படுகிறது. கவர்ச்சி காட்ட முடியாது என்பது சினிமா உலகில் தவிர்க்க முடியாத நிர்பந்தம்.

வெற்றி கொண்டாட்டம்
உங்கள் படங்களின் வெற்றியை நீங்கள் எப்படி கொண்டாடுவீர்கள், என்றதற்கு வெற்றியை நான் ஒரு போதும் என் தலையில் ஏற்றி கொண்டது இல்லை. எப்போதும் நான் ஒரு விதமான பயந்த பதற்றமான மனநிலையில் தான் இருப்பேன். ஏனென்றால் நான் நடித்த படங்கள் மக்களிடம் வரவேற்பை பெறுமா, அது சரியான முடிவா, அது எந்த அளவிற்கு எனது ரசிகர்ளை பாதிக்கும், என பல கேள்விகள் எனக்குள் இருக்கும்.

விமர்சனங்களுக்கு பதிலடி
என் சினிமா வாழ்வில் பல விமர்சனங்களுக்கும், ஏளனத்திற்கும் நான் ஆளாகியுள்ளேன். அவர்களுக்கு நான் என் வெற்றிப் படங்கள் மூலமாக தான் பதிலடி கொடுத்து வருகிறேன். இந்த உலகம் நாம் எப்படி இருந்தாலும் பேசும். அப்படி இருக்கையில், நான் என்னைப் பற்றி இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது பற்றி கவலைப்படுவதில்லை.

சினிமாவில் 100 சதவிகித உழைப்பு
நான் பேசிய சில விஷயங்கள் திரித்து சொல்லப்படுவதாலேயே, நான் கடந்த 10 ஆண்டுகளாக பத்திரிகைகளுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ பேட்டி அளிப்பதை தவிர்த்து ஒதுங்கியே இருந்தேன்.என்னுடைய வேலை நான் சினிமாவில் எனது 100% முயற்சியை, உழைப்பை தர வேண்டும் என்பதே. அதை என் மனதளவில் நான் சிறப்பாக செய்து வருகிறேன்.

நடிகைகளுக்கு தைரியம்
சினிமாவில் ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிகாரமும் ஏன் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இனிமேலாவது நடிகைகள் தங்களுக்கு எது தேவை என்பதை தைரியமாக கேட்க முன் வரவேண்டும் என்று நயன்தாரா கூறினார்.நயன்தாரா இன்று திரையுலகில் முன்னணியில் இருப்பதற்கு அவரின் இந்த மனதைரியமும், துணிச்சலும் கூட ஒரு காரணம் தான்.


Click it and Unblock the Notifications











