twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இதனால்தான் எந்திரன் 2வில் அர்னால்டு நடிக்க முடியாமப் போயிருச்சாமே!

    |

    சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் எந்திரன் 2-வில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்காததற்கு ஒப்பந்த முரண்பாடே காரணம் என மறைமுகமாக விளக்கம் அளித்துள்ளார் லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் ராஜூ மகாலிங்கம்.

    பிரம்மாண்டத்திற்குப் பேர் போன இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் நாயகனாகவும், வில்லனாகவும் ரஜினியே நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்திருந்தார்.

    இந்நிலையில், தற்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் தொடங்கியுள்ளார். நேற்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

    ரோபோவாக எமி...

    ரோபோவாக எமி...

    இப்படத்திலும் ரஜினியே நாயகனாக நடிக்க, நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். எமி இந்தப் படத்தில் ரோபோவாக நடிப்பதாகக் கூறப்படுகிறது.

    வில்லன்...

    வில்லன்...

    முதலில் இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு நடிக்க இருப்பதாக பேச்சு நிலவியது. பின்னர் ஹிரித்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தற்போது ரஜினிக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமார் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

    அர்னால்டு விலகல்...

    அர்னால்டு விலகல்...

    இந்நிலையில், இந்தப் படத்தில் அர்னால்டு நடிக்காததன் காரணம் குறித்து லைக்கா நிறுவனத்தின் படைப்பாற்றல் குழு தலைவர் ராஜூ மகாலிங்கம் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஒப்பந்த முரண்பாடுகள்...

    ஒப்பந்த முரண்பாடுகள்...

    அதில் அவர், "ஒப்பந்த முரண்பாடுகள்... இந்திய சினிமாவுக்கும் ஹாலிவுட்டுக்குமான இடைவெளியை நிரப்புவதில் இருக்கும் உண்மையான சவால் இது. உங்களின் ஆதரவுக்கு நன்றி திரு.பாட்ரிக் ஸ்வார்ஷ்நெகர்" என்று பதிவு செய்துள்ளார்.

    English summary
    Contractual contradictions !!! " Real challenge to build the BRIDGE between Indian Cinema and Hollywood" we will miss our Terminator !!! Appreciate all your support Mr Patrick Schwarzenegger!!” said lyca's creative head Raju Mahalingam in his facebook page.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X