»   »  அண்ணாமலையை எடுக்க ஏன் பாஸ் அமெரிக்கா போறீங்க?

அண்ணாமலையை எடுக்க ஏன் பாஸ் அமெரிக்கா போறீங்க?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ருசியாக சமைக்கத் தெரியாதவள் பாட்டி சமையலை ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறுவது போல ஆகிவிட்டது தமிழ் சினிமாவின் நிலை. அதிலும் முதல் இரு படங்களையுமே, பழைய சூப்பர் ஹிட் படங்களின் கதைகளை கமுக்கமாக காப்பியடித்த அட்லீயின் நிலையோ அந்தோ பரிதாபம்.

விஜய்க்கு ஃபேவரிட் அண்ணாமலை படம் என்பதால் அந்த படத்தை கொத்துக்கறியாக்கி பேர் எடுக்க கிளம்பி விட்டார். கதை இதுதான் எனத் தெரிந்துவிட்டது ஆனால் அதை வெளியில் காட்டாத அளவுக்கு செய்தி பரப்ப வேண்டுமே?

Why Atlee chose US for the remake of Annamalai?

அதற்கு அவர் தேர்ந்தெடுத்திருப்பது அமெரிக்கா. ஆமாம் ஜனவரியில் அமெரிக்காவில்தான் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம். விஜய் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தி நடித்த படம் என்றென்றும் காதல். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

எனவே வெளிநாட்டில் பாடல் காட்சி என்றால் மட்டும் செல்லும் விஜய் படத்தின் கதையே வெளிநாடு என்றால் தவிர்ப்பார். எதையோ சொல்லி விஜய் மனதை மாற்றியிருக்கும் அட்லீ, இந்தப் படத்தின் மூலம் ஷங்கராகவே மாற முடிவு செய்துவிட்டார் போலிருக்கிறது.

English summary
Vijay and Atlee have planned to go America for the unofficial remake of Rajinikanth's Annamalai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil