twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீஸ்ட் ஆடியோ லாஞ்ச் வைக்காததற்க்கு காரணம்.. பிரபல விமர்சகர் ஆணித்தரமாக கூறிய பதில்!

    |

    சென்னை : இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தற்போது வெளியாகியுள்ளது பீஸ்ட்

    செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகி பாபு, ரெடிங் கிங்ஸ்லி என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்

    வழக்கம் போல இல்லாமல் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லாஞ்ச் வைக்காததற்க்கு உண்மையான காரணம் இதுதான் என பிரபல சினிமா விமர்சகர் உறுதியான காரணத்தை கூறியுள்ளார்.

    மொக்கை படங்கள் தான் தியேட்டரில் வருது...எந்த படத்தை சொல்றாரு ப்ளூ சட்டை மாறன்? மொக்கை படங்கள் தான் தியேட்டரில் வருது...எந்த படத்தை சொல்றாரு ப்ளூ சட்டை மாறன்?

    புரோமோ வீடியோவை வெளியிட்டு

    புரோமோ வீடியோவை வெளியிட்டு

    கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்த இயக்குனர் நெல்சன் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளார். ஒவ்வொரு அப்டேட் வெளியிடும்போது புரோமோ வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நெல்சனின் காமெடி சென்ஸ்க்கு பலரும் ரசிகர்கள். நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் இவரை பின் தொடர்ந்து வருகிறது.

    திரைப்படங்களில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் ஜாலியாக பேசக்கூடியவர் என்பதால் முன்னணி நடிகர்கள் பலரும் இவரின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து விஜய் உடன் இணைந்து பீஸ்ட் படத்தை இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் கதை களத்தில் விஜய்க்கு என்ரே பார்த்து பார்த்து எடுக்கப்பட்ட பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி திரையரங்குகளில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது.

    பக்கா மாஸ் படமாக

    பக்கா மாஸ் படமாக

    செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகிபாபு,ரெடின் கிங்ஸ்லி என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்க காமெடி ஆக்ஷன் என இரண்டும் கலந்த பக்கா மாஸ் படமாக ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார் நெல்சன். ரசிகர்களை மட்டுமல்லாமல் பேமிலி ஆடியன்ஸ்க்கும் பிடித்த படமாக உள்ள பீஸ்ட்க்கு வழக்கமான விஜய் படங்களைப் போல ஆடியோ லான்ச் எதுவும் வைக்கவில்லை. பொதுவாக விஜய் படங்கள் வெளியாகும்போது ஆடியோ லான்ச் வைக்கப்படும் அந்த ஆடியோ லான்ச்சில் விஜய் பேசும் குட்டி கதை, அரசியல் கிண்டல் என அடுத்த ஒரு வாரத்திற்கு மிக பரபரப்பாக பேசப்படும். ஆனால் அது போன்ற ஒரு நிகழ்வு பீஸ்ட் படத்திற்கு நடக்காததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் இருந்தனர்.

    ஆடியோ லான்ச் வைக்காததற்க்கு காரணம்

    ஆடியோ லான்ச் வைக்காததற்க்கு காரணம்

    ரசிகர்களுக்காகவே 10 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் நெல்சனுடன் இணைந்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்றது ரசிகர்களுக்கு சிறு ஆறுதலை அளித்தது. இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்கு ஆடியோ லான்ச் வைக்காததற்க்கான காரணத்தை பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி பகிர்ந்துள்ளார்.ஆடியோ லாஞ்ச் வைக்காததற்க்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் முதல் காரணமாக சொல்லப்படுவது பீஸ்ட் படத்தில் இரண்டு பாடல்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளதால் ஆடியோ லான்ச் நடைபெறவில்லை என ஒருபுறம் கூறப்படுகிறது. மற்றொருபுறம் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை விஜய் சந்தித்ததாகவும் அதனால் உதயநிதி ஸ்டாலின் சன் பிக்சர்ஸ் மூலமாக பீஸ்ட் ஆடியோ லான்ச் நடக்க விடாமல் செய்து விட்டார் எனவும் ஒருபுறம் கூறப்படுகிறது.

    இரண்டு பாடல்கள் மட்டுமே

    இரண்டு பாடல்கள் மட்டுமே

    அடுத்த காரணமாக பீஸ்ட் படத்தில் போடப்பட்ட மால் செட்டப் சன்டிவி அலுவலகத்தின் பக்கத்திலேயே செட் போடப்பட்டது அங்குதான் ஆடியோ லான்ச் வைக்க இருந்தாதக சில செய்திகள் வெளிவந்திருந்தது. இவ்வாறு பல காரணங்கள் ஆடியோ லான்ச் வைக்காததற்க்கு சொல்லப்பட்டாலும் நான் நினைப்பது இந்த படத்தில் இடம்பெறுவது இரண்டு பாடல்கள் மட்டுமே என்பதால் படக்குழு ஏற்கனவே அதை யூட்யூப் தளத்தில் வெளியிட்டு விட்டதால் இரண்டு பாடல்களுக்கு மேல் இல்லாத காரணத்தினால் ஆடியோ லான்ச்சை படக்குழு தவிர்த்து விட்டது என்றுதான் நான் நினைக்கிறேன் என பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி ஆணித்தரமாக கூறியுள்ளார்.

    English summary
    Why Beast audio launch not happened reveals Cinema critic bismi
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X