நாம நம்ம அக்ஷராவை ’சைட்’ அடிப்போம்.. பிரியங்கா கேங் பேசும் போது அக்ஷரா பக்கம் திரும்பிய கேமரா!

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஓவியாவை ரசிக்கத் தொடங்கிய ரசிகர்கள் இந்த 5வது சீசனில் பாவனி ரெட்டியையும் அக்‌ஷரா ரெட்டியையுமே அதிகம் ரசித்து ஆர்மி எல்லாம் ஆரம்பித்து உள்ளனர்.

ரசிகர்கள் தான் இப்படி ஜொள்ளு விடுறாங்களேன்னு பார்த்தா பிக் பாஸ் எடிட்டர் ஒரு படி மேலே சென்று பிரியங்கா கேங் பேசும் போது அக்‌ஷரா அழகா மேக்கப் போடும் அழகை ஜூம் செய்து ரசிகர்களுக்கு காட்டி தான் ஒரு அக்‌ஷரா ரசிகர் என்பதை நிரூபித்துள்ளார் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ரசிகர்களுக்கு யாரை பிடிக்கும் என்பதை நன்கு புரிந்து வைத்துள்ளார் பிக் பாஸ் எடிட்டர் என்றும் அக்‌ஷரா ஆர்மியினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.

அழகு குயின்

அழகு குயின்

நடிகையும் மாடல் அழகியுமான அக்‌ஷரா ரெட்டி துபாயில் நடந்த 'மிஸ் குளோப் 2019' டைட்டிலை வென்று மகுடத்தை சூடியவர். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட இந்த அழகு குயின் அக்‌ஷரா ரெட்டிக்கு ரசிகர்கள் ஆரம்பத்திலேயே ஆர்மி அமைத்து அவரது புகைப்படங்களை வைரலாக்கி வருகின்றனர்.

ராஜு லைக்

ராஜு லைக்

அக்‌ஷரா ரெட்டியை ஆரம்பத்தில் நடிகை அமலா அக்கினேனியுடன் ஒப்பிட்டுப் பேசிய ராஜு ஜெயமோகன் அக்‌ஷரா ரெட்டி தனது அப்பா மற்றும் அண்ணன் குறித்த கதையை சொல்லி முடித்ததும் லைக் போட அதற்கு ஒரு பஞ்சாயத்தையே பிரியங்கா வைத்தது அக்‌ஷராவை அப்செட் ஆக்கியது.

Recommended Video

போலியான உறவும் சிரிப்பும், Vanitha Vijaykumar angry post | Pritha, Sridevi
ரசிகர்களால் தாங்க முடியல

ரசிகர்களால் தாங்க முடியல

அழகு சிலையான அக்‌ஷரா ரெட்டி தனிமையில் நின்று கதறி அழுததை பார்த்த அவரது ஆர்மியினர் சக போட்டியாளர்கள் எங்க செல்லத்தை ஏன் இப்படி நோகடிக்கிறாங்க என கமெண்ட்டுகளை போட்டு பிரியங்காவை திட்டவே தொடங்கி விட்டனர்.

கேமரா ஃபோகஸ்

கேமரா ஃபோகஸ்

இந்நிலையில், நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் பிரியங்கா கேங் ஏதோ மும்முரமாக பேச பிக் பாஸ் எடிட்டரோ அதை பற்றி எல்லாம் கவலையே படாமல் அக்‌ஷரா ரெட்டி அழகாக உதட்டுக்கு லிப்ஸ்டிக் போடுவது, மேக்கப் போடுவது என அல்ட்ரா க்ளோஸ் அப்பில் வைத்து அவரை மட்டுமே ஃபோகஸ் செய்தது பிக் பாஸ் ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

அக்‌ஷராவும் பாவனியும்

அக்‌ஷராவும் பாவனியும்

கடந்த சீசனில் ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியனை பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள் எல்லாம் இந்த சீசனில் அதிகம் ஃபோகஸ் செய்வது பாவனி ரெட்டி மற்றும் அக்‌ஷரா ரெட்டியை மட்டும் தான் என ஏகப்பட்ட நெட்டிசன்கள் மீம்களை அள்ளி வீசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X