For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிரபலங்கள் சிக்கலையா.. திடீரென பிக் பாஸ் குழு இப்படியொரு முடிவெடுக்க என்ன காரணம்? ரசிகர்கள் கலாய்!

  |

  சென்னை: பிக் பாஸ் சீசன் 6 குறித்த முதல் அதிகாரப்பூர்வ புரமோ தற்போது வெளியாகி உள்ளது.

  Recommended Video

  Thalaivasal Vijay - Vijayakanth | அன்றே சொன்னாரு, அதே போல செஞ்சிட்டாரு *Celebrity

  வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் பிக் பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  இந்நிலையில், இந்த சீசனில் பொதுமக்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறலாம் என்கிற அசத்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

  சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது சோனாலி போகத் உடலில் ஏகப்பட்ட காயங்கள்.. இது கொலை தான் என வந்த பிரேத பரிசோதனை அறிக்கை.. இருவர் கைது

  பிக் பாஸில் பொதுமக்கள்

  பிக் பாஸில் பொதுமக்கள்

  பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பொது மக்களும் கலந்து கொள்ளலாம் என்றும் தங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய சின்ன வீடியோ க்ளிப்பை விஜய் டிவியின் பிக்பாஸ் டீமுக்கு அனுப்ப vijay.startv.com என்கிற வெப்சைட்டுக்கு சென்று லாகின் செய்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வேண்டும் என்கிற காரணத்தை வீடியோவாக வெளியிட்டால் தேர்வாகும் நபர்கள் பிக் பாஸ் சீசன் 6 செலிபிரிட்டி ஆவார்களாம்.

  இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

  இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் ஓட்டுப் போட்டுத் தான் போட்டியாளர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பது போலத்தான் இந்த அறிவிப்பும் என்று அந்த புரமோவுக்கு கீழே கமெண்ட்டுகள் பறக்கின்றன. எப்படி இருந்தாலும், ஏற்கனவே அவர்கள் தேர்வு செய்து வைத்துள்ள மக்கள் போர்வையில் இருக்கும் பிரபலங்கள் தான் பங்கேற்பார்கள் என்றும் விளாசி வருகின்றனர்.

  மானம் மரியாதை முக்கியம்

  மானம் மரியாதை முக்கியம்

  வேணாம் சார் நாங்க உழைச்சி சாப்பிட்டுக்கிறோம்.. இப்படி மானம் மரியாதை வித்து பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை என நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், ஏகப்பட்ட வீடியோக்கள் வந்து குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால் குலுக்கல் முறையில் ஒருத்தரை தேர்வு செய்வீர்களா என்றும் நக்கல் செய்து வருகின்றனர்.

  நமீதா மாரிமுத்துவுக்கு என்னாச்சு

  நமீதா மாரிமுத்துவுக்கு என்னாச்சு

  கடந்த முறை இப்படித்தான் திருநங்கை போட்டியாளர் என நமீதா மாரிமுத்து உள்ளே சென்றார். ஒரே வாரம் கூட முடியாத நிலையில், அவரை வெளியே அனுப்பிட்டீங்க, அவருக்கு உண்மையில் அங்கு என்ன பிரச்சனை நேர்ந்தது என்பதே வெளிச்சத்துக்கு வரவில்லை என போன சீசனை கம்பேர் செய்து பொளந்து கட்டி வருகின்றனர்.

  பிரபலங்கள் சிக்கவில்லையா

  பிரபலங்கள் சிக்கவில்லையா

  போன சீசனுக்கே பெரிய அளவில் பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பங்கேற்கவில்லை. விஜய் டிவி புராடெக்ட்ஸை வைத்தே ஓட்டினீர்கள். இந்நிலையில், இந்த முறை அவர்கள் கூட சிக்கவில்லையா? இப்படி மக்கள் பக்கம் திரும்பி இருக்கீங்க, யாரும் ஏமாந்து போயிடாதீங்க அப்புறம் அடுத்த ஜூலி நீங்க தான் என எச்சரித்து வருகின்றனர்.

  கமல் எங்கே காணோம்

  கமல் எங்கே காணோம்

  வழக்கமாக பிக் பாஸ் சீசன் புரமோக்களில் கமல் தானே வருவார். இப்போ ஏன் ராஜுபாய் வந்திருக்கார். இந்த சீசன் 6ஐ கூட ராஜு ஜெயமோகனே தொகுத்து வழங்கப் போறாரா? என பிக் பாஸ் ரசிகர்கள் வேறலெவலில் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த சீசனில் பொதுமக்கள் கலந்து கொண்டால் நிகழ்ச்சி இன்னும் நம்பகத்தன்மையோடு இருக்கும் என ஆதரவு குரல்களும் கேட்கின்றன.

  English summary
  Bigg Boss Tamil Season 6 latest promo with Raju Jeyamohan gets trolled by Bigg Boss fans. This time Bigg Boss team searches public as a contestant for their Big Reality show.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X