ஹீரோயின்களை ஒதுக்குறாங்களா.. சந்திரமுகி 2, ஜெயிலர், சூர்யா 42.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏன் இல்லை?

சென்னை: கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு பெரும்பாலும் முக்கியத்துவமே கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை பல நடிகைகளே எழுப்பி உள்ளனர்.

Recommended Video

Lawrence படத்தில் Trisha-வை தொடர்ந்து list-ல் சேர்ந்த Lakshmi Menon Kollywood | Filmibeat Tamil

சம்பள பிரச்சனையில் இருந்து, அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை வரை ஏகப்பட்ட சிரமங்களை நடிகைகள் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீப காலமாக படத்தில் நடிக்கும் நடிகைகள் குறித்த அறிவிப்பை கூட வெளியிடாமல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஹீரோ வொர்ஷிப்

ஹீரோ வொர்ஷிப்

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய சினிமாவிலேயே இந்த ஹீரோ வொர்ஷிப் எப்போது முடிவுக்கு வரும் என்றே தெரியாத நிலை உள்ளது. முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளுக்கு கூட முக்கியத்துவம் இல்லை. அதற்காக அவர்கள் தனிப் படங்களில் நடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

லூசு ஹீரோயின் விமர்சனம்

லூசு ஹீரோயின் விமர்சனம்

ஒரு சில படங்களை தவிர்த்து ரிலீசாகும் 90 சதவீத படங்களில் ப்ளூ சட்டை மாறன் விமர்சிப்பது போல ஹீரோவின் ஜோடி கதாபாத்திரங்களை லூசு ஹீரோயினாகவே இயக்குநர்கள் எழுதுவது ஏன் என்கிற கேள்வியும் எழுகிறது. தமிழ் சினிமாவில் வலிமையான பெண் கதாபாத்திரங்கள் என்றாலே படையப்பா நீலாம்பரி, சந்திரமுகி கங்கா போன்ற வெகு சில கதாபாத்திரங்கள் மட்டுமே ரசிகர்கள் நினைவுக்கு வருகிறது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ஆணாதிக்கம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ஆணாதிக்கம்

விஜய்க்கு ஜோடியாக நயன்தாராவே நடித்தாலும் பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் மட்டுமே காட்சி தருகிறார். வாரிசு வரை அதுதான் தொடர்கிறது. ஜெயிலர், இந்தியன் 2 என அனைத்து கோலிவுட் படங்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ஹீரோக்கள் மட்டுமே காட்சி தர வேண்டும் என்பது என்ன விதி என்று தான் தெரியவில்லை.

சந்திரமுகி 2 ஹீரோயின் யார்

சந்திரமுகி 2 ஹீரோயின் யார்

சந்திரமுகி 2 டைட்டிலே பெண் கதாபாத்திரத்தை குறிப்பது தான். ஆனால், இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பதாக மட்டுமே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரஜினியின் சந்திரமுகி படத்திலேயெ ஜோதிகா, நயன்தாரா நடிப்பதை ஆரம்பத்திலேயே அறிவித்தனர்.

ஜெயிலர் ஹீரோயின் யார்

ஜெயிலர் ஹீரோயின் யார்

சந்திரமுகி 2வில் கூட ஹீரோயின் யார் என்பது சர்ப்ரைஸ் ஆக இருக்கட்டும் என்று விட்டு விடலாம். ஆனால், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஹீரோயின் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏன் வெளியிடவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தமன்னா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், தயாரிப்பு தரப்பு அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது. ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் வசந்த் ரவி உள்ளிட்டோர் இதுவரை படத்தில் இடம்பெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூர்யா 42 ஹீரோயின்

சூர்யா 42 ஹீரோயின்

பட பூஜை போட்டதையே அறிவிக்கலாமா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இரு தயாரிப்பு நிறுவனங்களும் இருந்த நிலையில், சூர்யா நேற்று ட்வீட் போட்டதும் பின்னாடியே வால் பிடித்தது போல யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் படத்தின் பூஜை பற்றியும் சூர்யா கலந்து கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டனர். ஆனால், திஷா பதானி நடிக்கிறாரா? இல்லையா? சூர்யா 42 படத்தின் ஹீரோயின் யார் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அவர்கள் வெளியிடவில்லை. ஹீரோ தான் பிசினஸாக இருக்கட்டுமே, ஹீரோயின்களை ஒதுக்காமல் இருந்தாலே போதும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X