ஒருவேளை இந்த வாரம் இவங்கள வெளியே அனுப்ப போறாங்களோ.. அதனால அந்த சூப்பர் சீனையே கட் பண்ணிட்டாங்களா?

சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு மணி நேர ஷோவாக எடிட்டர்கள் கட் செய்து ஒளிபரப்பி வருகின்றனர். சில காட்சிகளை பிக் பாஸ் அன்சீனில் ஒளிபரப்புகின்றனர்.

சிலரை இருட்டடிப்பு செய்தும் சிலரை மட்டுமே ஃபோகஸ் செய்தும் இந்த எடிட்டிங் வேலை இருக்கிறது என சமீபத்தில் வெளியேறிய அபிஷேக் ராஜா உள்பட பல பிக் பாஸ் போட்டியாளர்கள் குறையாக சொல்லி உள்ளனர்.

இந்நிலையில், நேற்று 1 நிமிடத்திற்கும் மேலாக பிளான்க் செய்த சின்ன பொண்ணுவின் காட்சியை கட் செய்திருந்தது ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தி உள்ளது.

இந்த வாரம் யார்

இந்த வாரம் யார்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. சின்ன பொண்ணு மற்றும் அபிநய் இருவரில் ஒருவர் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருவரும் பெரிய பங்களிப்பை அளிக்கவில்லை என சிலரும் மற்றவர்கள் மட்டும் பெரும் பங்களிப்பை அளித்து விட்டார்களா? என்று சிலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

விளம்பரம் ஆரம்பம்

விளம்பரம் ஆரம்பம்

என்னடா தீபாவளி நெருங்கிடுச்சே இன்னமும் பிக் பாஸ் வீட்டில் விளம்பர டாஸ்க்குகள் ஆரம்பிக்கவில்லையே என நினைத்துக் கொண்டிருந்தால் நேற்று மெத்தை விளம்பரம் ஒரு நல்ல ஃபிசிக்கல் டாஸ்க் உடனே ஆரம்ப மானது. நீங்களாவது ஒரு டஃப் டாஸ்க் கொடுத்தீங்களே என ரசிகர்கள் அந்த மெத்தை நிருவனத்தை பாராட்டி வருகின்றனர்.

சின்ன பொண்ணு நடுவர்

சின்ன பொண்ணு நடுவர்

பிக் பாஸ் வீட்டிலேயே அதிக வயதான பெண் போட்டியாளர் சின்ன பொண்ணு என்பதால் அவர் பிளான்க் செய்ய வேண்டாம் எனக் கூறி அவரை நடுவராக போட்டு விட்டனர். ஆனால், தன்னால் அந்த பிளான்க் உடற்பயிற்சியை அசால்ட்டாக செய்ய முடியும் என்று சின்ன பொண்ணு செய்து அசத்தி உள்ள அன்சீன் வீடியோ வைரலாகி வருகிறது.

மெயின் எபிசோடில் இல்லை

சின்ன பொண்ணு இதுவரை பெரிய அளவில் எந்த டாஸ்க்கிலும் கலந்து கொள்ளாத நிலையில், அவர் செய்த இந்த ஒரு நிமிட பிளான்க் காட்சியை அதிக மக்கள் பார்க்கும் மெயின் எபிசோடில் ஏன் வைக்கவில்லை என்கிற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அதுதான் காரணமா

அதுதான் காரணமா

இந்த வாரம் எப்படியோ சின்ன பொண்ணுவை பிக் பாஸ் வீட்டில் இருந்து அனுப்ப பிளான் பண்ணி இருப்பதால் அவர் சிறப்பாக பிளான்க் செய்த அந்த காட்சியை ஏன் எபிசோடில் வைத்து கடைசி நேரத்தில் அவருக்கான வெயிட்டேஜை ஏற்ற வேண்டும் என நினைத்து தான் பிக் பாஸ் எடிட்டர்கள் இப்படி செய்து விட்டனரோ என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

விரைவில் லீக்

விரைவில் லீக்

ஞாயிற்றுக் கிழமை எபிசோடில் என்ன ஆனது? யார் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி உள்ளார் போன்ற தகவல் இன்று மாலை இணையத்தில் வழக்கம் போல கசிந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏதாவது எதிர்பாராத ட்விஸ்ட் அல்லது யாராவது யாரையாவது சேவ் செய்வது போன்ற மேஜிக் நடக்கிறதா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X