கிறிஸ்டோபர் நோலனின் தி ஓடிஸி படத்தை உலகத்திலேயே.. இந்தியாவுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்
சென்னை: ஹாலிவுட் படங்களுக்கு என்று இந்தியாவில் ரசிகர்கள் பெருமளவில் இருக்கிறார்கள். அதுவும் ஹாலிவுட் நடிகர்களுக்கு, இயக்குநர்களுக்கு என்றெல்லாம் பெரும் ரசிகர் திரள் இருக்கத்தான் செய்கிறது. அப்படியான வெறித்தனமான ரசிகர்களைப் பார்க்கும் போது, எப்படிடா ஒரு படத்தை இந்த அளவுக்கு உன்னிப்பாக கவனிக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினால், ஒரு இயக்குநர் இந்த படத்தை பெருமளவு மெனக்கெட்டு நாம் ரசிக்க வேண்டும், எக்ஸ்பீரியன்ஸ் செய்ய வேண்டும் என்று எடுக்கும் போது, அதை இவ்வாறு கவனிப்பது என்பது அந்த மொத்த படக்குழுவின் உழைப்பையும் அங்கீகரிப்பதைப் போலத்தானே என்று அழுத்தமான பதிலை ஜெஸ்ட் லைக் தட்-ஆக சொல்லிவிடுகிறார்கள்.
கிறிஸ்டோபர் நோலனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் தனது ஒவ்வொரு படத்தையும் உருவாக்கும்போது தனது ரசிகர்களை தன்னைவிட அறிவாலிகளாக, புத்திசாலிகளாக கருதி படத்தை எடுக்கிறார். ரசிகர்களை எந்த ஒரு ஃபிரேமிலும் ஏமாற்றிவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கும் இயக்குநர்களில் அவரும் ஒருவர்.

இப்படி இருக்கையில், அவரது தி ஓடிஸி படத்திற்கு உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களில் இந்தியர்களுக்கு ஒரு மிகப்பெரிய கௌரவத்தை அளிக்கவுள்ளார் நோலன். அது படம் உலகம் முழுவதும் இந்தியா தவிர, ஜூலை 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் ஜூலை 16ஆம் தேதியே படத்தை ரிலீஸ் செய்யவுள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் அவதார் படத்தின் மூன்றாவது பாகம் வந்தபோது, தி ஓடிஸி படத்தின் டீசர் ஐமேக்ஸ் திரைகளில் திரையிடப்பட்டது. அப்போது ரசிகர்கள் பெருமளவில் ஆர்பரித்து டீசரைக் கொண்டாடினர். அதுவும், மேட் டாமனின் லுக்கை பார்த்ததும் ஆரவாரம் மேலும் அதிகரித்தது.

எகிறிய எதிர்பார்ப்பு: இப்படி இருக்கையில், படத்திற்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு என்பது இந்திய சினிமாக்களில் இருக்கும் கதாநாயகர்களின் படங்களைப் போலவும், இந்திய இயக்குநர்களின் இயக்கத்தில் உருவான படங்களைப் போலவும் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இது எல்லாம் போதாது என்று, தனது படத்தின் புரோமோஷனுக்காக கிறிஸ்டோபர் நோலன் தனது படக்குழுவுடன் இந்தியாவுக்கு வந்து இரண்டு நாட்கள் விளம்பரம் செய்தும் சென்றிருக்கிறார்.

புக்கிங்: அவரது இந்திய வருகையும் படம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்களும் இந்தியா குறித்தும் இந்திய ரசிகர்கள் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள், இந்திய ரசிகர்களை எந்த அளவுக்கு உயர்வாக கருதுகிறார் என்பதும் தெரியவந்தது. படத்தின் புக்கிங்கும் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐமேக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே புக்கிங் தொடங்கி உள்ளது.


Click it and Unblock the Notifications