பாரிவேந்தர் மீதான மோசடி புகாருக்கு சினிமா சங்கங்கள் ஆதரவு ஏன்..?

By Shankar

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து என்கிற பாரிவேந்தரின் நெருங்கிய நண்பரான பட அதிபர் மதன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மோசடி புகார் அளித்திருக்கிறார்கள்.

மதனும் காசியில் கங்கை நதியில் சங்கமம் ஆகிறேன் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவாக ஆனார். அதே கடிதத்தில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்களிடம் வசூலித்த தொகையை எஸ்.ஆர்.எம். நிறுவனத்தில் கொடுத்து விட்டதாகவும், மாணவர்களுக்கு சீட் கொடுத்து விடுங்கள் என்றும் பல 'குடும்ப' விஷயங்களைச் சொல்லி இருந்தார்.

மாயமான மதனைத் தேடி காசிக்குப் போனது ஒரு டீம்... அதில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சிவாவும் இருந்தார்.

Why cinema trades supporting Parivendhar?

கங்கை கரையில் தேடுதல் வேட்டையை வேடிக்கை பார்த்து ஊர் திரும்பியது இந்த டீம்.

இதற்கிடையில் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த அனைவரும் எஸ் ஆர் எம் பச்சமுத்து வீட்டு முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போலீசிலும் இவர்கள் மீது மோசடி புகார் குவிந்தன.

இந்த சூழலில் மாணவர்கள் கொடுத்த பணத்துக்கும் கல்வி நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை என மறுத்தது. மாயமான மதனை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதான் இந்த மோசடி புகாரின் இப்போதைய நிலை....
இதில் சினிமா யூனியன்கள் எங்கே வருகிறார்கள்?

இது முழுக்க மாணவர்கள் கல்வி தொடர்புடையதும், பண மோசடி புகார்.
இந்த புகாரில் சிக்கியவர்கள் சட்ட ரீதியாக நிரூபித்து எப்படியும் வெளியே வந்து விடுவார்கள்.

பணம் கொடுத்தவர்களில் பலர் மதன் கடிதம் போன்ற முடிவுக்கு தள்ளப்படுவார்கள்.
இதுபோன்ற மோசடி குற்றசாட்டில் சிக்கியவர் நல்லவர் வல்லவர் என்று பல ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு சங்கங்கள் வரிந்து கட்டி ஆதரவு தெரிவிக்கிறது ஏன்..?

அல்லது இந்த மோசடியில் சங்கத்தில் பதவியில் இருப்பவர்களுக்கும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் சாதாரண நபர்களுக்கும் எழும்பும்.

இந்த இரு சங்கங்களில் உறுப்பினர் ஆக இருக்கும் அனைத்து நபர்களுக்கும் இதில் உடன்பாடு கண்டுதான் இந்த அறிவிப்பை இரு சங்கங்களும் அறிவித்தனவா...?

உறுப்பினர்களுக்கு உதவி செய்கிறார் என்றால் சங்க ஆபீசிலும், உறுப்பினர் வீடுகளிலும் கடவுளாக்கிக் கொள்ள வேண்டியதுதான். அதை விட்டு மோசடி புகாரில் சிக்கியவருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பது அந்த மோசடிக்கு துணை போவதற்கு சமம். சினிமாவை வாழ வைக்கும் பொது மக்களுக்கு எதிரானதும் கூட!

இந்த அவசர பத்திரிகை சந்திப்புக்கு உண்மையான காரணம் விரைவில் அம்பலமாகிவிடும்!

- கோலிவுட் கோடங்கி

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X