ஆயிஷா.. ஜனனி.. தனா.. என்ன பெண் போட்டியாளரா வெளியேத்துறாங்க.. பிக் பாஸில் எதிரொலிக்கிறதா ஆணாதிக்கம்?
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் குரல் மற்றும் ஹோஸ்ட் என அனைவரும் ஆண்களாக உள்ள நிலையில் தொடர்ந்து பெண் போட்டியாளர்களாக வெளியேத்துறாங்க என்றும் ஒரே ஒரு சீசன் தவிர அனைத்து சீசன்களிலும் டைட்டிலை ஆண் போட்டியாளர்களுக்கே அள்ளிக் கொடுத்து வருவது ஏன் என்கிற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
ஹீரோ வொர்ஷிப் மனநிலை ரியாலிட்டி ஷோவிலும் அதிகம் தென்படுவது ஏன் என்கிற கேள்வியும் அழுத்தம் திருத்தமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. எவிக்ஷனில் கூடவா தொடர்ந்து பெண் போட்டியாளர்களை வெளியே அனுப்புவீங்க என கேள்விகள் எழுந்துள்ளன.
அப்படி உள்ளே இருக்கும் ஆண் போட்டியாளர்கள் என அவ்வளவு திறமையானவர்களா? என்கிற சாட்டையடி கேள்விகளும் உருவாகி உள்ளன.

ஆணாதிக்க ஷோவா
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒரு ஆணாதிக்க ஷோவாக முற்றிலுமாக மாறிவிட்டது என அந்த நிகழ்ச்சியை பார்க்கும் பல பெண் ரசிகைகள் தங்கள் எதிர்ப்பை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்கள் எதிர்க்கும் அளவுக்கே நிகழ்ச்சியும் ஆணாதிக்க ஷோவாக மாறி உள்ளதாக பல பிரபலங்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆண்களை சுற்றியே
பிக் பாஸ் என்கிற டைடிட்லில் தொடங்கி அதில் வரும் குரல் உள்பட அனைத்துமே ஆண் இனத்தை மையப்படுத்தி தான் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஹோஸ்ட் பண்ணும் கமல்ஹாசனும் உள்பட ஆண்களை சுற்றியே கேம் சென்றாலும், போட்டியாளர்கள் அதிகப்படியாக பெண்கள் இடம்பெற்றும் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு டைட்டிலையும் ஆண் போட்டியாளர்களுக்கே கொடுப்பது ஏன் என்கிற கேள்வி தான் கிளம்பி உள்ளது.

ஆயிஷா, ஜனனி, தனா
பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நோக்கி நகரும் நிலையில், வழக்கம் போல வீட்டில் உள்ள பெண்களை எல்லாம் அடுத்தடுத்து வெளியேற்றி வருகின்றனர். தொடர்ந்து ஆயிஷா, ஜனனி மற்றும் இந்த வாரம் தனலட்சுமியை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியிருப்பதற்கு எதிராக ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

என்ன பண்ணாங்க
பிக் பாஸ் வீட்டில் இன்னமும் பொத்திப் பொத்தி வைக்கப்பட்டு வரும் ஏடிகே, மணிகண்டன், அமுதவாணன் மற்றும் கதிர் உள்ளிட்ட போட்டியாளர்களை விட தனலட்சுமி டஃப் போட்டியாளர் கிடையாதா? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். எப்பவோ வெளியேறி இருக்க வேண்டியவர்களை எல்லாம் கடைசி வரை சேவ் செய்ய என்ன காரணம் என்றும் விமர்சனங்கள் பறக்கின்றன.

ரித்விகா மட்டுமே
பிக் பாஸ் முதல் சீசனிலேயே ஓவியா டைட்டில் வெல்வார் என எதிர்பார்த்த நிலையில், அவரை வெளியே அனுப்பிவிட்டு ஆரவ்வுக்கு டைட்டில் கொடுத்தனர். 2ம் சீசனில் பெண் போட்டியாளருக்கு கொடுக்க வேண்டும் என ரித்விகாவுக்கு டைட்டில் கொடுத்தனர். ஆனால், அதன் பிறகு ஒரு சிறந்த பெண் போட்டியாளர் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லையா ஏன் இந்த பாகுபாடு என ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

விக்ரமனுக்கு டைட்டில்
மீதமுள்ள ரச்சிதா, மைனா மற்றும் ஷிவினையும் வெளியே அனுப்பி விட்டு இந்த முறை விக்ரமனுக்கு டைட்டில் மற்றும் அசீமுக்கு ரன்னர் அப் கொடுத்துடுங்க கேம் நல்லா இருக்கும் என கண்டபடி கழுவி ஊற்றி வருகின்றனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ஒரு ஷோவில் கூட பெண்களுக்கான சம உரிமை வழங்கப்படுவதில்லையே? ஏன் என்றும் நெட்டிசன்கள் நறுக்கென கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











