தனுஷுக்கும் அனிருத்துக்கும் பிரச்னையா?.. இந்த காரணத்தால் தான் இருவரும் இணையாமல் இருக்கிறார்களா?

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு உள்ள இசையமைப்பாளர்களில் மிகவும் காஸ்ட்லியான இசையமைப்பாளர் என்றால் அது, அனிருத் தான். காரணம் பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் படங்கள், பெரிய நடிகர்களின் படங்கள் என அதில் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் என்ற பெயர் இயல்பாகவே சேர்ந்து விடுகிறது. அப்படியான அனிருத் கடந்த வருடம் தனுஷுடன் இணைந்து படம் செய்வதில்லை என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இருவருக்கும் பிரச்னையா என்ற கேள்வியும் எழுகிறது.

அனிருத் ஒரு சென்சேஷனல் இசையமைப்பாளர் என்ற சந்தேகம் யாருக்கும் இருக்காது. காரணம், அவர் தனது அறிமுகப் படமான 3 படத்தில் இடம்பெற்ற பாடலான ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு தேசிய விருது பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தது தனுஷ். இவர் இசையமைப்பாளராக மாறிய பின்னர், தனுஷின் படங்களுக்கும் அவரது தயாரிப்பில் உருவான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இவர்கள் இருவரது கூட்டணியில் ஒரு படம் வெளியாகிறது என்றால் படம் ஹிட், பாடல்கள் ஹிட் என குறித்து வைத்துக் கொள்ளலாம். இப்படியான நிலையில், பீப் சாங் விவகாரத்திற்கு பிறகு அனிருத் மற்றும் தனுஷ் இடையே மனக்கசப்புகள் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அந்த பிரச்னைக்குப் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து படம் செய்யாமல் இருந்தார்கள். ஆனால் அனிருத்துக்கு படங்கள் அமைந்து கொண்டுதான் இருந்தது.

Why Dhanush and Anirudh Are Cannot Work Same Film They Have Any issue

தனுஷ்: இப்போது அனிருத், ரஜினிகாந்த், விஜய், கமல், அஜித் என அனைவரது படங்களுக்கு இசையமைத்து வருகிறார். மேலும், தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என இவரது ரேஞ்ச் முற்றிலும் மாறிவிட்டது. இப்படியான நிலையில் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணியில் மீண்டும் உருவாகி வெளியான படம் என்றால், அது திருச்சிற்றம்பலம். இந்த படத்திலும் பாடல்கள் செம ஹிட் அடித்தது. படத்தில் நடித்த நித்யா மேனனுக்கு தேசிய விருது கிடைத்தது.

Why Dhanush and Anirudh Are Cannot Work Same Film They Have Any issue

அனிருத்: தனுஷ், நித்யா மேனன் கூட்டணியில் இட்லி கடை என்ற படம் உருவாகி தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பின்னர் தனுஷ் இயக்கத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டது. அதாவது, அவரது 50 வது படமான ராயன் படத்தை தனுஷ் இயக்கினார். அதேபோல் இவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ரிலீஸ் ஆகிவிட்டது. ஆனால் இந்த படங்களுக்கு ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஜி.வி. பிரகாஷ் குமார் முறையே இசையமைத்துள்ளார்கள்.

Why Dhanush and Anirudh Are Cannot Work Same Film They Have Any issue

காரணம்: இப்படியான நிலையில் அனிருத் ஏன் தனுஷ் படங்களுக்கு இசை அமைப்பதில்லை, இருவருக்கும் இடையில் ஏதாவது பிரச்னையா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இயல்பாகவே எழுந்து விடுகிறது. ஆனால் இருவரும் இணைந்து படம் பண்ணாமல் இருப்பதற்கு காரணம், அனிருத் தற்போது செம பிஸியாக இருக்கிறார் என்பது ஒரு காரணம் என்றால், மற்றொரு காரணம் அனிருத்தின் சம்பளம். அனிருத் ஒரு படத்திற்கு சுமார் 19 கோடிகள் வரை சம்பளமாக பெறுகிறார் என கூறப்படுகிறது. இதன் காரணமாகவும் அனிருத்தை கமிட் செய்வதில் தயாரிப்பாளர்களுக்கு பிரச்னை இருக்கிறது என கூறப்படுகிறது. அதனால்தான் தனுஷ் படத்தில் அனிருத்தை கமிட் செய்ய முடியாமல் போகிறதாம்.

More from Filmibeat

Read more about: dhanush anirudh தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X