Dhanush: தனுஷின் குபேரா தமிழில் ஓடாததற்கு காரணம் நயன்தாராவா? சேகர் கம்முலா என்ன சொன்னாரு தெரியுமா?
சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் குபேரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. பிரபலமான தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நாகர்ஜுனா , ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படம் தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்திற்கு லாபம் தரும் வசூலைப் பெற்றுக் கொடுத்ததே தெலுங்கு ரசிகர்கள்தான்.
விமர்சகர்களால் பாராட்டப்பட்ட இந்த படத்திற்கு தமிழ்நாட்டில் போதுமான அளவுக்கு வசூல் இல்லாதது குறித்து தெலுங்கு ஊடகங்கள் பல காரணங்களை யூகமாக முன் வைத்து வருகிறது. இது மட்டுமல்லாமல் இணையவாசிகளும் அந்த ஊகங்களை இணையத்தில் அதிகம் பரப்பி வருகிறார்கள். அதாவது, தனுஷின் குபேரா படம் ஓடாததற்கு காரணம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனுஷ் குறித்து பல சர்ச்சைகளை பொதுவெளியில் பேசியதுதான் காரணம் என கூறப்படுகிறது.

அதாவது, நயன் - விக்கி திருமண வீடியோவில் நானும் ரௌடிதான் படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த புகைப்படங்களை வீடியோவைப் பயன்படுத்துவதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டுப் பார்த்து அவர் அனுமதி தரவில்லை என பெரிய கடிதம் ஒன்றை எழுதி வெளியிட்டார்கள். அதற்கு தனுஷ் தரப்பில் இருந்து எந்தவிதமான பதில் கடிதங்கள் எதுவும் இல்லாமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தால் ஏற்பட்ட சலசலப்பு தனுஷ் மீதான நன்மதிப்பை மக்கள் மத்தியில் குறைத்து விட்டது எனக் கூறப்படுகிறது.
ரஜினி மகள்: அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்ததும் மற்றொரு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும் தனுஷ் படத்தை புறக்கணித்து வருவதாகவும் அதனால்தான் ராயன் படமே உலகம் முழுவதும் சேர்த்து ரூபாய் 100 கோடிகள் வசூலித்தது எனவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ஃபீல்குட் படமாக இருந்தும் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைத் தழுவக் காரணமும் தனுஷ் மீதான சர்ச்சைகள்தான் என தெலுங்கு ஊடங்கங்களும் இணையவாசிகளும் பதிவிட்டு வருகிறார்கள்.
நித்யா மேனன் - சிவகார்த்திகேயன்: நடிகை நித்யா மேனனின் அண்மைக்கால பேட்டிகள் கூட தனுஷை மறைமுகமாக தாக்கிப் பேசுவதைப் போலத்தான் இருந்தது எனவும், அமரன் இசை வெளியீட்டு விழா மேடையில் சிவகார்த்திகேயன் நடிகை சாய் பல்லவியை நோக்கி பேசுகையில் தனுஷை மறைமுகமாக சாடியதாகவும் திரைத்துறையிலும் மக்கள் மத்தியிலும் பேச்சுகள் ஓடியது. இவையெல்லாம் தான் குபேரா படம் மட்டுமல்லாது கடைசியாக வெளியான தனுஷ் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஆதரவு கிடைக்காமல் போனதற்கு காரணம் என பேசிவருகிறார்கள்.
சேகர் கம்முலா: குபேரா படம் தமிழ்நாட்டில் ஏன் பெரிய அளவில் வசூல் குவிக்கவில்லை என்ற கேள்வியை இயக்குநர் சேகர் கம்முலாவிடம் வைத்த போது, அவர் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. நானும் படம் தமிழ்நாட்டில் பிக்கப் ஆகி விடும் என நம்பிக் கொண்டு உள்ளேன். இந்த படத்தை தமிழ் ரசிகர்கள் கனெக்ட் செய்து கொள்ளும் அளவுக்கு பல அம்சங்கள் உள்ளது. குறிப்பாக தனுஷ் உள்ளார். எனக்கே ஆச்சரியமாகத்தான் உள்ளது ஏன் படம் தமிழ்நாட்டில் வசூல் குவிக்கவில்லை என" என்று பதில் அளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











