»   »  சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகல! - 'மனசைத் திறந்தார்' தனுஷ்

சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகல! - 'மனசைத் திறந்தார்' தனுஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயனுக்கு சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை என்று கூறியுள்ளார் தனுஷ்.

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனுக்கு '3' படத்தில் சினிமா வாய்ப்பு வழங்கியவர் தனுஷ்.

Why Dhanush not join with Sivakarthikeyan again?

தொடர்ந்து எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனை வெற்றிகரமான நாயகனாக்கினார். காக்கிச் சட்டையிலும் அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரித்தார் தனுஷ்.

ஆனால் அந்தப் படத்துக்குப் பிறகு இருவருக்கும் உரசல் என்று தகவல் பரவியது. இதுகுறித்து கேட்கும்போதெல்லாம் இருவருமே பூசி மெழுகி பதில் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தங்களுக்கிடையிலான கருத்து வேறுபாட்டை சமீபத்தில் வெளிப்படையாகவே கூறிவிட்டார் தனுஷ்.

மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து படம் தயாரிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த தனுஷ், "சிவகார்த்திகேயனுக்கு எங்கள் நிறுவனத்தால் சம்பளம் கொடுத்து கட்டுப்படியாகவில்லை. அதனால்தான் அவரை வைத்து மீண்டும் படம் எடுக்க முடியவில்லை. மற்றபடி அவர் வளர்வது சந்தோஷம்தான்," என்றார்.

English summary
Actor Dhanush says that Sivakarthikeyan's big salary is the main reason for not producing movies with him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil