தனுஷை கழட்டிவிட்ட குபேரா டீம்?.. ராஷ்மிகா மந்தனாவை வைத்து இதை பண்ணியிருக்காங்களே.. என்ன பிரச்சனை?

சென்னை: நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கிய தனுஷுக்கு மிகப்பெரிய வெற்றி எல்லாம் கிடைக்கவில்லை என்றாலும் தனது அக்கா மகனை சிறப்பாகவே அறிமுகப்படுத்திய திருப்தி அவருக்கு இருக்கும் என்றே சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை சற்று முன் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

ஆனால், நடிகர் தனுஷ் அந்த படம் குறித்து எந்தவொரு ட்வீட்டும் ஏன் போடவில்லை என்கிற கேள்விகள் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் கிளம்பி உள்ளன. இயக்குநர் சேகர் கமுலாவுக்கும் தனுஷுக்கும் இடையே ஏதாவது பிரச்சனை வெடித்து விட்டதா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

Dhanush Kubera Rashmika Mandanna

ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி வரும் படங்கள் தொடர்ந்து பல நூறு கோடிகளை வசூல் செய்து வருவதால் லக்கி சார்மாக இருக்கட்டும் என அவரை வைத்தே குபேரா ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளதா என்றும் தெரியவில்லை.

குபேரா ரிலீஸ் தேதி: இந்த ஆண்டு தனுஷுக்கு அடுத்தடுத்து அஜித் குமாரை போலவே 2 படங்கள் வெளியாக காத்திருக்கின்றன. விடாமுயற்சி படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், குட் பேட் அக்லி படத்தை அஜித் ரசிகர்கள் மலைபோல நம்பி வருகின்றனர். ஆனால், அந்த படத்துக்கு போட்டியாக தனுஷ் தனது இட்லி கடை படத்தை களமிறக்க காத்திருக்கிறார். மேலும், ஜூன் மாதம் 20ம் தேதி சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Dhanush Kubera Rashmika Mandanna

ராஷ்மிகா மந்தனா அறிவிப்பு: குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு போஸ்டரை நடிகர் தனுஷ் வெளியிடாமல் நடிகை ராஷ்மிகா மந்தனா மட்டுமே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகவே அந்த படத்தின் ஹீரோ தான் இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவார்கள். மற்றவர்கள் ஷேர் செய்வது வழக்கம். ஆனால், தனுஷ் குபேரா படத்தின் அறிவிப்பை கூட ஏன் ஷேர் செய்யவில்லை என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஒருவேளை குபேரா டீம் தனுஷை கழட்டிவிட்டு விட்டதா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Dhanush Kubera Rashmika Mandanna

இட்லி கடையில் பிஸி: நடிகர் தனுஷ் இட்லி கடை படத்தை முடித்தாக வேண்டும் என்றும் ஏப்ரல் 10ம் தேதி வெளியிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருவதால் கூட அவர் சோஷியல் மீடியாவில் குபேரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை வெளியிடாமல் போயிருக்கலாம் என்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கூட தனுஷ் வரவில்லையே என்றும் அவரது ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

வழக்கு: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் டைட்டில் குறித்தும் ஒரு வழக்கு ஓடிக் கொண்டிருக்கிறது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் காரணமாக ஒருவேளை அவர் இந்த போஸ்டரை வெளியிடவில்லையா என்றும் விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. எப்படி இருந்தாலும் இந்த ஆண்டு இட்லி கடை, குபேரா என அடுத்தடுத்து பெரிய படங்களை இறக்கி பாக்ஸ் ஆபீஸில் வெயிட்டு காட்ட காத்திருக்கிறார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X