நடிகையின் காரை ஏன் தாக்கினேன்?: நியூஸ் சேனல் கேமராமேன் விளக்கம்

By Siva

மும்பை: நடிகை தனுஸ்ரீயின் காரை தாக்கியது ஏன் என்று இந்தி செய்தி சேனலின் கேமராமேன் தெரிவித்துள்ளார்.

நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் தெரிவித்த நடிகை தனுஸ்ரீயின் காரை சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. ராஜ் தாக்கரே தலைமையிலான மகராஷ்டிரா நவநிர்மன் சேனா ஆட்களை தூண்டிவிட்டு தனது காரை சேதப்படுத்தினார் நானா என்று தனுஸ்ரீ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காரை தாக்கிய பவன் பரத்வாஜ் கூறியிருப்பதாவது,

ரிப்போர்டர்

ரிப்போர்டர்

சம்பவம் நடந்தபோது நான் இந்தி செய்தி சேனலில் கேமராமேனாக இருந்தேன். பிலிமிஸ்தானுக்கு சென்று ஷூட் செய்யுமாறு எனக்கு அன்று பணி கொடுக்கப்பட்டது. ரிப்போர்டர் தேஜல் மெஹ்தாவுடன் பிலிமிஸ்தானுக்கு சென்றேன். என்ன கதை, யார் என்று எனக்கு எதுவும் தெரியாது. நடிகர்கள் வெளிய வரட்டும் என்று காத்திருந்தோம்.

தனுஸ்ரீ தத்தா

தனுஸ்ரீ தத்தா

தனுஸ்ரீ தத்தா மற்றும் அவர் தந்தை வருவதை பார்த்தவுடன் நான் கேரமாவை ரோல் செய்யத் துவங்கினேன். உடனே நடிகையுடன் வந்தவர்கள் எங்கள் ரிப்போர்டர் தேஜல் மெஹ்தாவை தாக்கினார்கள். தனுஸ்ரீயின் தந்தை என் கேமரவை பறித்து கீழே போட்டார். அதில் என் கேமரா சேதம் அடைந்தது. என் கேமராவை வீசிவிட்டு அவர் காரில் வேகமாக கிளம்பினார்.

மயக்கம்

தனுஸ்ரீயின் கார் என் காலில் ஏறியதில் நான் கிட்டத்தட்ட மயங்கிவிட்டேன். இதை பார்த்துவிட்டு அங்கிருந்தவர்கள் என் முகத்தில் தண்ணீரை தெளித்தனர். அவர்களின் காரை நுழைவாயிலில் ஒரு கூட்டம் நிறுத்தியது. என் கேமரா சேதம் அடைந்ததால் நான் கோபம் அடைந்தேன். கேமராவை சரி செய்ய பணம் தருமாறு கேட்டேன். அவர்கள் பணம் தர மறுத்ததால் காரை தாக்கினேன். காரை தாக்கிய மற்றவர்கள் யார் என்று எனக்கு தெரியாது என்றார் பவன்.

தனுஸ்ரீ

தனுஸ்ரீ

என் ஆட்கள் மீடியாக்காரர்களை தாக்கியதாகவும், அதனால் பதிலுக்கு அவர்கள் என் காரை தாக்கியதாகவும் ஒரு பொய்யை கிளப்பிவிட்டுள்ளார் நானா படேகர். அவரின் பொய்யை நம்ப வேண்டாம். பழைய வீடியோக்களை எடுத்துப் பார்த்தால் உண்மை தெரியும். தயவு செய்து அந்த வீடியோக்களை பாருங்கள் என்று தனுஸ்ரீ தத்தா கேட்டுக் கொண்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X